அருள்மிகு ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவில் (திருத்தண்கால்)

God Name : ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள், ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ நரசிம்மர், உற்சவர்: திருத்தங்கல் அப்பன்

திருக்கழுக்குன்றம் கோவில்

கோவை

Call : +91-

ஸ்ரீ தேவி, பூ தேவி, நீளா தேவி ஆகிய மூவரும் தங்களுக்குள் யார் பெரியவர்? என்ற தர்க்கத்தில் போட்டியிட முற்பட்டனர். ஸ்ரீ தேவி பூலோகத்திற்கு வந்து சோலைகளால் சூழப்பட்ட இத்தலத்தில் அமர்ந்து தவமிருக்கலானாள். மகரிஷிகளும் முனிவர்களும் அவளைப் போற்றி ஆராதித்து வழிபட்டனர். இத்தலத்திலேயே இருக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர். மணவாளன் இல்லாமல் ஏகாந்தமாக இருக்கலாகாதென எண்ணிய ஸ்ரீ தேவி இங்கு ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி மஹாவிஷ்ணுவை அனுதினமும் பூஜித்தாள். பிரத்யட்சமான மஹாவிஷ்ணுவிடம், தன்னோடு இத்தலத்தில் எழுந்தருளி சேவார்த்திகளை அனுக்ரஹிக்க வேண்டினார். பூ தேவியும் நீளா தேவியும் இத்தலத்திற்கு வந்து அது போலவே வேண்டி நின்றனர். அவர்கள் மூவரிடையே ஏற்பட்ட சர்ச்சை நீங்கி அமைதி ஏற்பட்டது. மஹாவிஷ்ணுவும் மூன்று தேவியர்கள் உடன் இருக்க திருவுளம்கொண்டார் என ஸ்தல வரலாறு. திருமகள் ஆகிய ஸ்ரீ தேவி தங்குவதற்குத் தேர்ந்தெடுத்த இடம் என்பதால் திருத்தங்கல் என்ற பெயர் பெற்றது. புரூரவன் எனும் அரசன் தன் நாட்டைப் புத்திரர்களிடம் ஒப்படைத்துவிட்டு தனது பத்னிகளுடன் இத்தலமருகே உள்ள வனத்தருகே கடுந்தவம் புரிந்து மஹாவிஷ்ணுவின் அருளைப் பெற்றான். துவாரகையில் நடைபெறவிருந்த உஷை - அநிருத்தன் கல்யாணம் இவரின் வேண்டுகோளுக்கிணங்க இத்தலத்தில் நடைபெற்றதாக ஐதீகம். கிருஷ்ணரின் புத்திரனான பிரத்யும்னனுக்கு, மன்மதனை மிஞ்சும் அழகையுடைய மகன் ஒருவன் இருந்தான். அவனது பெயர் அநிருத்தன். பாணாசுரன் எனும் அசுரனின் மகளான உஷை, தான் அழகிய ராஜகுமாரன் ஒருவனோடு இருப்பதாகக் கனவு கண்டாள். கனவை நினைவாக்க முயற்சிக்கையில் அவன் அநிருத்தன் என்பதை அறிந்து, தனது மாயா சக்தியால் அவனைத் தனது அரண்மனைக்குத் தூக்கிக் கொண்டு வந்துவிட்டாள். அநிருத்தனுடன் கூடி கர்ப்பஸ்திரீ ஆனாள். பேரனை மீட்கப் படை திரட்டிக் கொண்டு வந்த கிருஷ்ணர், உஷை கர்ப்பஸ்திரீ என அறிந்ததும் வேறு வழியன்றி இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தார். இத்திருமணம் திருத்தங்கலில் மூலவர் முன்பாக நடந்தேறியது என்றும் தெய்வீக வாசுதேவனும் மற்றும் பலரும் இத்திருமணத்திற்காக வந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. ஆதிசேஷனுக்கும் ஆலமர விருட்சத்திற்கும் தங்களுக்குள் யார் பெருமைக்குரியவர் என்ற போட்டி ஏற்பட்டு, அதன் விடையைக் கண்டறிய பிரம்மனிடம் சென்று பிரஸ்தாபித்தன. திருமால் எப்போதும் பள்ளி கொண்டிருப்பதால் ஆதிசேஷனே பெருமைக்குரியவர் என பிரம்மா கூறினார். இதனால் ஆலமரமானது திருத்தங்கல் க்ஷேத்ரம் வந்து ஒரு மலை வடிவம் கொண்டு திருமாலை நோக்கித் தவமிருந்தது. அதன் வேண்டுகோளுக்கிணங்க திருமால் அந்த மலையின் மீது கோவில் கொண்டார் என ஸ்தல வரலாறு. இதனால் (தங்கு + ஆல) தங்கால மலை எனப் பெயர் கொண்டது. ஆர்ஷம் என்ற வகையைச் சேர்ந்த ஆலமரமே இங்கு ஸ்தல விருட்சமாக உள்ளது.
நூறடி உயரம் கொண்ட குன்றின் மீது மூன்று நிலைகளாக அமையப் பெற்ற கோவில். வண்ணமயமான சிற்பங்களைக் கொண்ட கொடுங்கைகள் வரவேற்கின்றன. முதல் நிலையில் அமையப் பெற்ற குடைவரைக் கோவிலில் ஸ்ரீ ரங்கநாதர் பாம்பணை மீது போக சயனமாகப் பள்ளி கொண்டுள்ளார். தேவியர்கள் இருவரும் திருவடி சேவை செய்கின்றனர். வலது புறமாக மார்க்கண்டேயரும் இடது புறமாக ப்ருகு முனிவரும் இடம் பெற்றுள்ளனர். அழகான உற்சவ மூர்த்திகள். ஸ்ரீ ரங்கநாதரின் சிலா விக்ரஹத்தின் மீது சுதை பூசப்பட்டு வண்ண சாயத்துடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. முன் மண்டபத்தில் புரூரவ சக்கரவர்த்தி தனது கரங்களில் வாளும் கேடயமும் ஏந்திய நிலையில் காணப்படுகிறார். இரண்டாம் நிலையில் செங்கமலவல்லித் தாயார் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். ஆறடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. ஒன்பது கஜ புடவை கட்டி அலங்கார பூஷிதையாகக் காட்சி தருகின்றார். பொதுவாக வீற்றிருந்த கோலத்தில் காணப்படும் தாயார் இங்கு நின்ற திருக்கோலம் கொண்டிருப்பது வித்தியாசமான சிறப்பு. இவருக்கு அருணகமலமகாதேவி என்ற திருநாமமும் உண்டு. தாயாருக்கு மட்டும் நாள்தோறும் எண்ணைக்காப்பு திருமஞ்சனத்துடன் நடைபெறுகிறது. தாயாருக்கு ஆராதனம் தொடங்கிய பின்னரே பெருமாளுக்குத் தொடங்குவர். வெள்ளிக்கிழமைகளில் அருகே உள்ள சுக்ரவார கொரட்டில் தாயார் ஊஞ்சல் சேவை சாதிக்கின்றார். தாயார் சந்நிதிக்கு வடக்கே உடையவர் மற்றும் திருமங்கை ஆழ்வார் சந்நிதிகள் உள்ளன. மூன்றாம் நிலையின் கொடிமரமருகே ஸ்ரீ நரசிம்மர் அரூபமாக இருக்கின்றார். மூன்றாம் நிலைக்கு எதிரே கருடாழ்வார் எழுந்தருளியுள்ளார். அமுத கலசம், சர்ப்பம் ஏந்திய இரு கரங்கள் மற்றும் கூப்பிய இரு கரங்கள் என சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் எழுந்தருளியுள்ளார். கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலம். சதுர்புஜங்களுடன் சங்கு - சக்ரதாரியாக இருக்கும் அழகான திருமேனி. வலது கரம் திருவடிகளைச் சுட்டிக் காட்ட இடது கரத்தை இடுப்பில் வைத்து நடுநாயகமாய் நிற்கின்றார். மூலவருக்கு வலப்புறமாக தெய்வீக வாசுதேவன், கருடன், அருணன், விஸ்வகர்மா, ஸ்ரீ தேவி - பூ தேவி தேவியர்கள் ஆகியோர் நின்ற கோலத்திலும், மார்க்கண்டேயர் அமர்ந்த கோலத்திலும் காணப்படுகின்றனர். மூலவரின் இடதுபுறமாக ஜாம்பவதி (நீளா தேவி), உஷை, அநிருத்தன் ஆகியோர் நின்ற கோலத்திலும், ப்ருகு முனிவர் அமர்ந்த கோலத்திலும் காணப்படுகின்றனர். 11 மூர்த்திகளும் சுதையாலானவை. உற்சவ மூர்த்தியான திருத்தங்கல் அப்பன் இரு தேவியர்களுடன் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். பஞ்சபருவ மூர்த்திகளான துருவம், கௌதுகம், உற்சவர், ஸ்நானம், பலி ஆகியோர் மூலவர் முன்பாகத் தோன்ற, விமானத்தில் தாண்டவ கண்ணன், ஆண்டாள் இருக்க, மூலஸ்தானத்தைச் சுற்றியுள்ள அதிஷ்டான தேவதைகளாக விநாயகர், துர்க்கை போன்றோர் காணப்படுகின்றனர். பிரகார வலச் சுற்றில் நரசிம்மர், சக்கரத்தாழ்வார், கிருஷ்ணர் மற்றும் ஆண்டாளைச் சேவிக்கலாம். பரமபதவாசலும் இருக்கின்றது. 108 திவ்ய தேசங்களுள் ஒன்று.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.