அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில், இருக்கன்குடி

God Name : -

திருக்கழுக்குன்றம் கோவில்

கோவை

Call : +91-

வடக்கிலிருந்து (சதுரகிரி - மஹாலிங்க மலை) ஓடி வரும் அர்ச்சுணா நதி, தெற்கே கோவிலையொட்டி பாயும் வைப்பாறு ஆகிய இரண்டும் சங்கமிக்கும் இடம். இரு கங்கைகள் இடையே அன்னை அமர்ந்து தரிசனம் தருவதால் இரு-கங்கை-குடி எனப் பெயருற்று பின்னர் மருவி இருக்கன்குடி என்றானது. சிவயோக ஞானசித்தர் சதுரகிரி மஹாலிங்க மலையில் தவமிருந்து பின் யோக நிஷ்டையானார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க சுயம்புவாக இங்கு எழுந்தருளி அன்னை அருள்பாலிக்கின்றாள் என ஸ்தல வரலாறு. காலப்போக்கில் வெள்ளத்தில் மூழ்கிய அம்மன் சிலை நீரில் அடித்து வரப்பட்டு பூமியுள் புதையுண்டதாக செவி வழி கதை ஒன்றும் கூறப்படுகிறது. வரட்டி விற்கும் பெண் ஒருவள் சாணத்தை சேகரிப்பதை வழக்கமாக கொண்டவள். ஒரு நாள் சாணத்தை சேகரித்து ஒரு கூடையில் போட்டுக் கொண்டிருந்தாள். எவ்வளவு முயற்சி செய்தும் கூடையை தூக்க முடியவில்லை. பலரும் முயன்றனர் - முடியவில்லை. கூடை வைத்திருந்த இடத்தில் பூமிக்குள் தான் இருப்பதாக அன்னை அசரீரியாக தெரியப்படுத்தினாள் என்றும் சிலையை வெளிக் கொணர்ந்து பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றனர் என்றும் வரலாறு. அக்னி சட்டி தூக்குதல், ஆயிரங்கண் பானை ஆகியன சிறப்பு பிரார்த்தனைகளாக இருக்கும். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆடி மாத வெள்ளி கொடியேற்றம் தொடங்கி 8 நாட்கள் விழா நடைபெறும். அன்னையின் உற்சவத் திருமேனி ரிஷப வாகனத்தில் கடைசி வெள்ளியன்று உலா வரும். பங்குனி உத்திர பெருவிழா 21 நாட்கள் நடைபெறும்.
மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் இருக்கன்குடி மாரியம்மன் சுயம்பு நாயகி. வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு வித்தியாசமாக அமர்ந்த நிலையில் தரிசனம் தருகின்றாள். மிகுந்த வரப்பிரசாதி. பார்க்க பரவசமூட்டும் சாந்த ஸ்வரூபம். கருணை பொழியும் விழிகளைக் கொண்டவள். சிம்ம வாகனத்திற்கு பதில் நந்தி வாகனம் உள்ளது. வெளி பிரகாரத்தில் விநாயகர், வீரபத்ரர், பைரவர், காத்தவராயன் மற்றும் அரச மரத்தடியில் சித்தி விநாயகர், பரிவார தேவதைகளாக பேச்சியம்மன், முப்புடாதி அம்மன், ராக்காச்சி ஆகியோரையும், காவல் தெய்வமான கருப்பசாமியையும் தரிசிக்கலாம். மாவிளக்கு மண்டபம் ஒன்றும் இருக்கின்றது. உற்சவ மூர்த்தியான சின்ன மாரியம்மன் (அக்கா) திருவுருவம் அழகாக இருக்கின்றது. மூலவர் இருக்கன்குடி மாரியம்மன் தங்கை. ஒரு சிறு பிணக்கு காரணமாக அக்கா ஊருக்குள் தனியே போய்விட்டதாக கூறுகின்றனர். வயன மண்டபத்தில் 20 நாட்கள் தங்கி தீர்த்தத்தை கண்களில் தடவினால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும், பார்வைக் கோளாறுகள் மறையும். உடம்பு சரியில்லாதவர்களை கொடி மரத்தில் கிடத்தி மாவிளக்கேற்றி தலை முதல் கால் வரை ஒற்றி எடுத்து பிரார்த்தனை செய்கின்றனர். சந்தோஷம் வந்தால் இவ்வூர் மக்கள் அன்னை இருக்கும் திசையை நோக்கி நன்றி கூறுகின்றனர். உற்சவ காலங்களில் சின்ன மாரியம்மனுக்கு பூஜை நடத்திய பின்னரே உற்சவங்களை தொடங்குவர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.