அருள்மிகு திருமேனிநாதஸ்வாமி திருக்கோவில் (திருச்சுழி)

God Name : பூமீஸ்வரர் எனப்படும் திருமேனிநாதர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

கோவை

Call : +91-

சந்திரசேன பாண்டியன் ஆண்ட காலத்தில், ஒரு பிரளயம் உண்டானது. நாட்டை அழிவிலிருந்து காக்கும்படி வேண்டி இறைவனிடம் தஞ்சமடைந்தான் அரசன். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் அடியவர் வடிவில் வந்து, பூமியில் ஒரு பிலத்தை உண்டாக்கி அதற்குள் பிரளய வெள்ளத்தைப் புகச் செய்தார். (பிலம் - பாதாளம்) வெள்ளம் சுழித்தபடியே பிலத்திற்குள் சென்றபடியால் திருச்சுழியல் என்ற பெயரை இவ்வூர் பெற்றது. இதை கவ்வைக் கடல் என்பார்கள். கோவிலின் வாசலில் உள்ள திருக்குளம். கவ்வை என்றால் ஒலி என அர்த்தம். பிலத்திற்குள் பாய்ந்த நீர் ஒலித்துக் கொண்டே உட்புகுந்ததால் கவ்வைக் கடல் எனப் பெயர் வந்தது. அழகிய நீராழி மண்டபமும் உள்ளது. அரச மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இரணியன், இரண்யாட்சன் ஆகிய இரண்டு அரக்கர்கள் தீண்டியதால் தோஷம் கொண்ட பூமி தேவி, இத் தலத்தில் தீர்த்தம் ஒன்றை உண்டாக்கி, இவ்விறைவனை வழிபட்டு தனது தோஷத்தைப் போக்கிக் கொண்டாள். கௌதம முனிவரின் சாபத்தால் கல்லாகிப் போன அகலிகை, ராமன் அருளால் சாபம் நீங்கப் பெற்று இத் தலம் வந்து இவ்விறைவனை வழிபட்டு தன் மீதான குறை முழுவதுமாக நீங்கப் பிரார்த்தித்தாள். கௌதம முனிவருக்கும் அகலிகைக்கும், சிவபெருமான் உமையன்னையுடன் திருமணக் கோலத்தில் காட்சி தந்து அருளிய ஸ்தலம். அர்ச்சுணன் தீர்த்த யாத்திரை நிமித்தமாக வந்தபோது தனது காண்டீபத்தால் அர்ஜுண தீர்த்தம் ஒன்றை உண்டாக்கி (கோடி தீர்த்தம்) இவ்விறைவனை வழிபட்டுள்ளான். இங்கு தவமிருந்த கௌண்டின்ய முனிவர் வேண்டிக் கொண்டதால் உண்டான ஆறு கௌண்டின்ய ஆறு. தற்போது குண்டாறு என்ற பெயரிலுள்ளது. தைப்பூச பழநியாண்டவர் உற்சவம், பங்குனியில் கௌதமர் - அகலிகைக்கு கல்யாண கோலம் காட்டியருளிய உற்சவம், மாசி மகத்தன்று கவ்வைக் கடலில் நீர்ப்பெருக்கு அதிகரித்து காணப்படும். பார்வதி தேவியார் திருமணம் வேண்டி தவமிருந்த ஸ்தலம்.
மூலவர்: பூமீஸ்வரர், அம்பாள்: துணை மாலை நாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் பூமிநாதர். சதுரமான ஆவுடையாருடன் கூடிய அழகிய திருமேனி. சுயம்பு லிங்கம். இவருக்கு சுழிகேசர், பூமீஸ்வரர், பிரளய விடங்கர், கல்யாணசுந்தரர், தனுநாதர் ஆகிய திருநாமங்களும் உண்டு. பூமி தேவி வழிபட்டதால் பூமீஸ்வரர் எனப் பெயர் பெற்றார். திருமேனிநாதர் என்பது தேவார காலத்துப் பெயர். வட்ட வடிவ ஆவுடையாருடன் மிகப் பெரிய திருமேனி கொண்ட அழகு லிங்கமாக ஸ்ரீ பிரளய விடங்கர் எழுந்தருளி அருள் புரிகின்றார். கோஷ்ட மூர்த்தங்கள் யாவும் அழகாக இருக்கின்றன. மூலஸ்தானத்தைச் சுற்றிலும் அகழி போன்ற அமைப்பு காணப்படுகிறது. பிரகார வலச் சுற்றில் பூமி தேவி சஹித சுழிகை கோவிந்தரை சேவிக்கலாம். வலச்சுற்றில் உஷா - பிரத்யுஷா தேவியர்களுடன் சூரியன், ரோஹிணி - கிருத்திகா தேவியர்களுடன் சந்திரன், வள்ளி - தெய்வயானை சஹித சுப்ரமண்யர் மற்றும் அநேக மூர்த்தங்களை தரிசிக்கலாம். வேலடி விநாயகர், தருமதா வரப் பிள்ளையார், போதி விநாயகர், அண்டம் பிரண்ட விநாயகர் சந்நிதிகள் இருக்கின்றன. நடராஜ சபையில் ஸ்ரீ நடராஜர் சிலாரூபியாக எழுந்தருளியுள்ளார். சிவகாமி அம்மையாரும், பதஞ்சலியும் மற்றும் வியாக்ரபாதரும் சிலா ரூபிகளாகக் காணப்படுகின்றனர். நடராஜர் சபைக்கு எதிரே அகலிகை - கௌதமர் திருவுருவங்கள் இருக்கின்றன. உற்சவ விக்ரகங்கள் யாவும் மிக அழகாக இருக்கின்றன. இவ்வாலயத்தின் எட்டு பகுதிகளில் அஷ்ட லிங்கங்களை தரிசிக்கலாம். பாண்டிய மன்னன் வழிபட்ட வெள்ளியம்பல நாதர் மற்றும் சோமசேகர லிங்கம், கௌண்டின்ய முனிவர் பூஜித்த கௌண்டின்ய லிங்கம், காலவ முனிவர் பூஜித்த காலவ லிங்கம், கண்வ முனிவர் பூஜித்த கண்வ லிங்கம், மன்மதன் பூஜித்த காமீச்வர லிங்கம், கிருதாங்க அசுரன் வழிபட்ட கிருதாங்கேஸ்வரர் மற்றும் சூரிய பகவான் பூஜித்த தினகரேஸ்வரர் லிங்கம் ஆகிய எட்டு லிங்கங்கள். ஸ்வாமி சந்நிதிக்கு தெற்காக, கிழக்கு பார்த்தபடி, அம்பாள் துணை மாலை நாயகி எழுந்தருளியுள்ளார். திரிபங்கி லக்ஷண அமைப்பிலுள்ள திருமேனி. சுயம்பு நாயகி. சாந்த ஸ்வரூபியாக நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தரும் அம்பாளை பார்த்துக் கொண்டே இருக்கலாம் - அத்தனை அழகு. சந்நிதியின் முன் மண்டபத்தில் ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். இவளுக்கு சகாயவல்லி, சொர்ணவல்லி, மாணிக்கவல்லி ஆகிய திருநாமங்களும் உண்டு. அம்பாள் கோஷ்டத்தில் இச்சா சக்தி, க்ரியா சக்தி மற்றும் ஞான சக்தி அம்மன்களை தரிசிக்கலாம். ஸ்வாமியும் அம்பாளும் திருமணக் கோலத்தில் காட்சி தருகின்றனர். இது ஒரு திருமண பிரார்த்தனை ஸ்தலமாக விளங்குகிறது. இவ்விறைவனை தரிசிப்போர்க்கு பாவங்கள் தொலையும். இது ஒரு தேவாரத்திருத்தலம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.