அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோவில் (வைப்பார்)
God Name : ஸ்ரீ காசி விஸ்வநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
கிருஷ்ணகிரி
Call : +91-
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ காசி விஸ்வநாதர். ஒளி வீசும் தேஜோ மய லிங்கத் திருமேனி. நாகாபரணத்தில் ஜொலிக்கின்றார். கிழக்கு பார்த்த சந்நிதி. தெற்கு பார்த்து கடற்கரையை நோக்கியபடி அம்பாள் ஸ்ரீ விசாலாட்சி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். ஸ்வாமியின் பாதங்களிலிருந்து திருநீறும், அம்பாளின் பாதங்களிலிருந்து குங்குமமும் எடுத்து பிரசாதமாக தருகின்றனர். இவற்றுடன் இங்குள்ள கடல் நீர், பசும்பால், கோமியம் ஆகியவற்றை சேர்த்து கரைத்து வீட்டில் தெளித்தால் வீடு சுபிட்சமாக இருக்கும் என அர்ச்சகர் தெரிவிக்கின்றார். தை அமாவாசையில் இங்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வம்சம் தழைக்கும் எனக் கூறப்படுகிறது. தை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் இங்குள்ள சங்குமுக தீர்த்தமான கடலில் ஸ்நானம் செய்து பித்ரு கார்யங்கள் மற்றும் தர்ப்பணங்களை செய்தால் முன்னோர்களின் ஆசிர்வாதத்தைப் பெறலாம் என்கிறபடியால், இத்தலம் பித்ரு தோஷ நிவர்த்தி ஸ்தலமாக விளங்குகிறது. விளாமரம் நின்ற குளக்கரை என்பதால் விளத்திகுளம் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. விளத்திகுளத்திலுள்ள சிவாலயத்தில் மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் எழுந்தருளியுள்ளார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.