அருள்மிகு செண்பகவல்லி - புவனநாதர் திருக்கோவில் (கோவில்பட்டி)

God Name : புவனநாதர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

கிருஷ்ணகிரி

Call : +91-

சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என்ற தர்க்கத்திலிருந்த, சங்கன் - பதுமன் எனப்படும் இரண்டு பாம்புகள், தங்களுக்குள் தெளிவு பெற்று, இவ்வூரின் களாக்காட்டில் சுயம்புவாய் எழுந்தருளியிருந்த லிங்க வடிவத்தை பூஜித்து வழிபட்டனர். புவன பூக்களால் அர்ச்சித்து வழிபட்டமையால் இறைவனுக்கு புவனநாதர் என்ற பெயர் வந்தது. ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட கோவில். செண்பகவேந்தன் எனும் அரசனின் கனவில் தோன்றி இறைவன் கூறிய இடத்தில் அமைக்கப்பட்ட கோவில். ஊரின் நடுவே மேட்டுப் பகுதியில் உள்ளதால் வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்படுவதில்லை. அருகே உள்ள குருமலையிலிருந்து இதமான காற்று வீசுகிறது.
மூலவர்: புவனநாதர், அம்பாள்: செண்பகவல்லி மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரியும் புவனநாதரின் திருவுருவம் மிகவும் அழகாக இருக்கின்றது. ஒளி வீசும் தேஜோமய லிங்கத்திருமேனி. தரிசிக்க மன நிம்மதி கிடைக்கின்றது. அம்பாள் செண்பகவல்லி அழகே உருவாக, திவ்யமான தேஜஸுடனும், அலங்கார பூஷிதையாகவும் காட்சி தருகின்றாள். ஏழடி உயரம் கொண்ட திருமேனி. தீட்சண்யமான பார்வை. அன்னையின் கிருபா கடாட்சம் பிரசித்தம். இரண்டு பெரிய துவாரபாலிகைகள் வாயில் காக்கும் பணியில் உள்ளனர். உற்சவ சமயங்களில் நின்ற கோலத்தில் காட்சி தரும் அம்பாளை உட்கார்ந்த கோலத்தில் அலங்கரிக்கின்றனர். அகஸ்தியருக்கு திருமணக்கோலக் காட்சி காட்டியருளிய ஸ்தலம். வாதாபியைக் கொன்றதனால் கொண்ட பிரம்மஹத்தி தோஷத்தை அகஸ்தியர் இவ்விறைவனை வழிபட்டு போக்கிக் கொண்டார். சங்கர பட்டருக்கு சிவபெருமான் காட்சி தந்து, அவரது வீட்டிலேயே உணவு உட்கொண்ட ஸ்தலம். அகஸ்தியர் உருவாக்கிய அருவி ஒன்று, கெண்டியிலிருந்து நீர் கொட்டுவது போல இருப்பதைக் காணலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.