அருள்மிகு ஸ்ரீ வெக்காளியம்மன் திருக்கோவில் (சிந்தலக்கரை)
God Name : இல்லை
திருக்கழுக்குன்றம் கோவில்
கிருஷ்ணகிரி
Call : +91-
ஸ்ரீ வெக்காளியம்மன் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகிறாள். 42 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான திருவுருவம். தசபுஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. எட்டு கரங்களில் ஆயுதங்கள் ஏந்தியும், மற்ற இரு கரங்களில் அபய-வரத முத்திரைகள் கொண்டும் காட்சி தருகிறாள்.
ஒரு பெரிய மேடையில் 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் வகையில் 27 சூலங்கள் நடப்பட்டுள்ளன. அந்தந்த நட்சத்திரங்களுக்குரியவர்கள் தங்களது பிரச்சினைகளை சீட்டில் எழுதி, குறிப்பிட்ட நட்சத்திரத்திற்கு உண்டான சூலத்தில் கட்டி பிரார்த்தனை செய்கின்றனர். பிரச்சினைகளை அன்னை சுமுகமாக தீர்த்து வைப்பாள். அம்மனின் திருவுருவத்தின் பக்கவாட்டில் இந்த மேடை உள்ளது.
வெக்காளியம்மனுக்கு எதிரே, பாம்பணையில் ராஜசயனம் கொண்டு மஹாவிஷ்ணு தரிசனம் தருகிறார். மிகப் பெரிய திருமேனி. சிலையின் நீளம் 70 அடி, உயரம் 56 அடி, அகலம் 27 அடி. இச்சிலையின் கீழ் உள்ள பாம்பின் உடலின் உள்ளே பூமி பாலகனும், பூமி சீனிவாசனும் இருப்பதாக கூறுகின்றனர்.
சக்தி மாலை அணிந்து 18 நாட்கள் விரதமிருந்து இருமுடி கட்டிக் கொண்டு வரும் பக்தர்கள் ஏராளம். பூக்குழி இறங்குதல், தீச்சட்டி தூக்குதல், அலகு குத்துதல் போன்ற பிரார்த்தனைகளை பக்தர்கள் மேற்கொள்கின்றனர்.
காளி பராசக்தி தவசித்தர் பீடத்தை ஸ்ரீ ராமமூர்த்தி ஸ்வாமிகள் நிறுவி வழிபாடுகள் செய்து கொண்டு வருகிறார்.
(இருமுடியில் - முன்முடி: தேங்காய், தேன் பாட்டில், மஞ்சள், குங்குமம், பத்தி, சூடம், பன்னீர் பாட்டில் - பின்முடி: பச்சரிசி, சீரகம், மிளகு)
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.