அருள்மிகு ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதர் நினைவாலயம் (எட்டயபுரம்)
God Name : சிவலிங்கம்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
கிருஷ்ணகிரி
Call : +91-
கி.பி. 1775 ஆம் ஆண்டு, ராமஸ்வாமி தீட்சிதர் - சுப்புலட்சுமி தம்பதியினருக்குப் பிறந்து, சகல சாஸ்திரங்களும் கற்று, சங்கீதத்தில் தனி முத்திரை பதித்து வாழ்ந்து வந்தார். சிதம்பரநாத யோகியுடன் காசிப் பயணம் மேற்கொண்டு, காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி ஆகிய தெய்வங்களை தினமும் தரிசித்து வந்தார். தனது குருநாதர் பூஜைக்கு உதவிக் கொண்டிருந்தார். பல ஸ்தலங்களுக்கு தீர்த்த யாத்திரை சென்று வந்தார். ஆன்மீகத்தில் தன்னை வளர்த்துக்கொண்டார். எட்டயபுரம் திரும்பி வரும்போது, மழை காணாது வறண்டிருந்த கிராமங்களில் "ஆனந்தாம்ருதாகர்ஷிணி அம்ருதவர்ஷணி" எனும் கீர்த்தனையைப் பாடி மழையை வரவழைத்து கிராம மக்களின் அன்பிற்கு பாத்திரமானார். ஒரு தீபாவளி தினத்தன்று, வீணையை தீட்சிதர் வாசிக்க, "மீனாட்சி மே முதம்தேஹி" என்ற கீர்த்தனையை சிஷ்யர்கள் பாடினார்கள். "இந்த உலக பந்தங்களிலிருந்து விடுதலை ஆகப் போகிறேன் - மீண்டும் ஒரு முறை இதே கீர்த்தனையை பாடுங்கள்" என சிஷ்யர்களிடம் கூறிவிட்டு, "சிவேபாஹி" என மூன்று முறை உச்சரித்து, ஜோதி ஸ்வரூபமாக அம்பாளின் பாதாரவிந்தங்களில் ஐக்கியமானார். எட்டயபுர சமஸ்தானத்தின் உதவியுடனும், பலரது முயற்சிகளாலும் இந்த நினைவாலயம் எழுந்தது.
ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதரை அடக்கம் செய்த இடத்தில் பெரிய மேடை அமைத்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்துள்ளனர். தீட்சிதரின் சிலா விக்ரகம் ஒன்றும் லிங்கத்தின் முன்னால் இருக்கின்றது. மண்டபத்தில் பிள்ளையார், சுப்ரமண்யர், மீனாட்சி ஆகியோரின் திருவுருவங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.