அருள்மிகு அர்க்கீஸ்வரர் திருக்கோவில் (பம்மல்)
God Name : அர்க்கீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
காஞ்சிபுரம்
Call : +91-
திருக்கடையூர் சென்று அமிர்தகடேசரை தரிசிக்கப் போவதாகப் புறப்பட்ட அகஸ்தியர், இயற்கையின் சீற்றம் காரணமாக நினைத்தபடி போக முடியவில்லை என வருந்தி,
ரிஷபாரூடராய் அர்க்கீஸ்வர பெருமானாகவும், அம்பாள் அமிர்தாம்பிகையுடனும், அகஸ்தியருக்கு இறைவன் காட்சி தந்தார்.
'அர்க்கலம்' என்றால் தடையை நீக்கிய எனப் பொருள். தடையை நீக்கிய அர்க்கீஸ்வரர் எனப் பெயர் கொண்டார் எனத் தல வரலாறு கூறுகிறது.
'அர்க்கன்' என்றால் சூரியன். சூரியன் வழிபட்ட இறைவன் என்பதால் இப்பெயரைக் கொண்டதாகவும் கூறுவர்.
மூலவர்: அர்க்கீஸ்வரர், அம்பாள்: அமிர்தாம்பிகை, விசேஷ மூர்த்தம்: சூரியம்மன்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக அர்க்கீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். உயரமான பாணம் கொண்டு கம்பீரமாக தரிசனம் தருகின்றார். அம்பாள் அமிர்தாம்பிகை உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
விசேஷ மூர்த்தமாக கிராம தேவதையான சூரியம்மன் எழுந்தருளி அருள் புரிகின்றாள்.
முகப்பிலுள்ள சிற்பங்கள் அனைத்தும் கயிலாயத்தை நினைவுபடுத்தும் வகையில், சிறந்த வேலைப்பாடுகள் கொண்டுள்ளது. வலச்சுற்றில் சிவாலய கோஷ்டத்து மூர்த்தங்கள் அழகுற அமைந்துள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.