அருள்மிகு ஜக்கம்மா தேவி திருக்கோவில் (பாஞ்சாலங்குறிச்சி)

God Name : இல்லை

திருக்கழுக்குன்றம் கோவில்

கிருஷ்ணகிரி

Call : +91-

ஜெகவீர பாண்டியனின் அமைச்சராக இருந்த தெலுங்கு பேசும் பொம்மு என்பவர் வீரம் மிகுந்தவர். அவரது வீரத்தைக் குறிப்பிட, 'கெட்டி பொம்மு' என்றழைத்தனர். அதுவே மருவி, தமிழில் 'கட்டபொம்மன்' என்றானதாகக் கூறப்படுகிறது. வீரம் விளையும் மண்ணாகப் போற்றப்படும் பாஞ்சாலங்குறிச்சி ஊரில், ஏழு நாய்களை ஒரு முயல் துரத்திய சம்பவம் நிகழ்ந்தது என்பர். ஜெகவீர கட்டபொம்மன் - ஆறுமுகத்தம்மாள் தம்பதியினருக்கு 1760ஆம் ஆண்டு பிறந்தவன் கட்டபொம்மன். 47வது பாளையக்காரராக ஆட்சி புரிந்து வந்தான். துணைவியின் பெயர் வீர ஜக்கம்மாள். ஆங்கிலேயருக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கி வந்த கட்டபொம்மனின் வீரம் சரித்திரம் படைத்துள்ளது. 1799ல் பானர்மென் எனும் வெள்ளைக்காரத் தளபதியால் கட்டபொம்மனின் கோட்டை பிடிக்கப்பட்டுப் பின்னமாக்கப்பட்டது. 16.10.1799ல் கயத்தாறு என்னும் இடத்தில் கட்டபொம்மனை பானர்மென் தூக்கிலிட்டான். 1959ல் திரு. சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த 'வீரபாண்டிய கட்டபொம்மன்' எனும் திரைப்படம் பலராலும் பார்க்கப்பட்டுச் சாதனை படைத்தது. ஆப்ரோ ஆசியன் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு உயரிய விருதினைப் பெற்றுத் தந்தது. 1974ல் முதலமைச்சராக இருந்த திரு. கருணாநிதி, கட்டபொம்மனின் கோட்டையின் வடிவிலேயே ஒரு நினைவுச் சின்னக் கோட்டையை எழுப்பினார்.
பிரதான கருவறையில் எழுந்தருளியிருக்கும் ஜக்கம்மா தேவி மிகவும் சக்தி வாய்ந்த வரப்பிரசாதி. அழகே உருவாக, சர்வாலங்காரத்துடன் தரிசனம் தருகின்றாள். ராஜகம்பள சமுதாயத்தைச் சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் குல தெய்வம். தீவிர முருக பக்தனான கட்டபொம்மன், திருச்செந்தூர் முருகனையும் ஜக்கம்மா தேவியையும் வழிபட்டு வந்தான். சித்திரை மாத திங்கட்கிழமை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். தேவராட்டம், சேர்வை ஆட்டம், கும்மி போன்ற ஆட்டங்களுடன் குதூகலமாகக் கொண்டாடுவார்கள். குடுகுடுப்பை, கோடங்கி பார்த்தல், கைரேகை, ஜோசியம் ஆகியவற்றை ஜக்கம்மா பெயரைச் சொல்லித்தான் தொடங்குவார்கள். திருச்செந்தூர் - பாஞ்சாலங்குறிச்சி இடையே 47 மணி மண்டபங்கள் கட்டப்பட்டன. திருச்செந்தூர் செந்திலாண்டவருக்கு உச்சிக்கால பூஜை முடிந்த பிறகே கட்டபொம்மன் போஜனம் செய்வது வழக்கமாம். அதைத் தெரிந்துகொள்ளவே 60 கி.மீ தூரத்திற்கு 47 மணி மண்டபங்கள் கட்டியதாகக் கூறப்படுகிறது. கட்டபொம்மன் ஆண்டபோது பல ஆலயங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. கட்டபொம்மன் தனது மனைவிக்காகச் செய்த நகைகளைத் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குக் கொடுத்துவிட்டதாகக் குறிப்பொன்று கூறுகிறது. வருடா வருடம் நடைபெறும் ஆவணி/மாசி திருவிழாக்களில் வள்ளி - தெய்வயானை தேவியர்களுக்கு அந்த நகைகளையே அணிவிக்கப்படுகின்றனவாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.