அருள்மிகு உலகாண்ட ஈஸ்வரி திருக்கோவில், ஒட்டப்பிடாரம்
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
கிருஷ்ணகிரி
Call : +91-
நுழைவாசலருகே, கோட்டை கருப்பசாமி காவல் தெய்வமாக எழுந்தருளி காவல் காத்து நிற்கின்றார். உயரத்திற்கு நெடிதுயர்ந்த திருவுருவம். பக்கத்தில், சங்கை ஊதியபடி ஆலி நிற்கின்றான். கன்னி விநாயகர், கொம்பு மாடன், கொம்பு மாடத்தி, தவசி தம்பிரான், பிரம்மசக்தி, நல்ல மாடசாமி, பேச்சியம்மன் ஆகிய கிராம தேவதைகளைத் தரிசிக்கலாம். பிரதான கருவறையில், அன்னை உலகாண்ட ஈஸ்வரி வடதிசை நோக்கி வீற்றிருக்கின்றாள். சந்திரனைப் போன்று பிரகாசமான திருவதனம் கொண்டவளாதலால், சந்திரமுகி என்று அழைக்கின்றனர். அன்னை ஆதிபராசக்தியே உலகம்மையாக எழுந்தருளி அருள்பாலிப்பதாக ஐதீகம். நோய்களை ஓட்டும் பீடாஹாரியாக இருப்பதால், பீடா - ஹாரி என்பது மருவி பிடாரி என்றானது. பிடாரி எழுந்தருளியிருக்கும் ஊர் என்பதால், 'ஓட்டும் பிடாரி உள்ள ஊர்' என்றானது. 'ஓட்டும் பிடாரம்' என்றழைக்கப்பட்டு, பின்னர் மருவி 'ஒட்டப்பிடாரம்' என்றானதாகக் கூறப்படுகிறது. வீரபாண்டியன் இங்கு ஆண்டதால், 'வீரபாண்டியபுரம்' என்றழைக்கப்பட்டது. செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் எனப் போற்றப்படும் சிதம்பரனார் பிறந்த ஊர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.