அருள்மிகு சங்கு ஸ்வாமிகள் சமாதி கோவில் (பசுவந்தனை)

God Name :

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

கிருஷ்ணகிரி

Call : +91-

கி.பி 1785ல் பசுவந்தனையில் அவதரித்த சங்கு ஸ்வாமிகள் ஒரு சிறந்த சித்த புருஷர். உயிர்களிடத்தும், பயிர்களிடத்தும் மிக்க அன்புகொண்டவர். இறைத் தொண்டுகளை செய்து கொண்டு கைலாசநாதரை வழிபட்டு வந்தார். கைலாசநாதர் கோவிலிலேயே எப்போதும் இருப்பாராம். கோவிலருகே நந்தவனம் ஒன்றை அமைத்து கைங்கர்யம் செய்து வந்தார். சிங்கம்பட்டி ஜமீன்தாருக்கு வந்திருந்த மகோதரம் எனும் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோயின் உபாதைகளிலிருந்து விடுபட முடியாமல் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்டார் ஜமீன்தார். பசுவந்தனைக்கு வந்து சங்கு ஸ்வாமிகள் பிரசாதமாக தந்த பழம் ஒன்றினை சாப்பிட்டார். வியாதி குணமாகி சந்தோஷப்பட்டார். சங்கு ஸ்வாமிகள் சம்பந்தப்பட்ட வைபவங்களுக்கு சிங்கம்பட்டி ஜமீன் விசேஷ மரியாதைகளை செய்கின்றது. 1870ல் பசுவந்தனையில் ஜீவசமாதியானார் ஸ்வாமிகள். சமாதியின் மீது லிங்கமும், நந்தியும் பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றனர். ஒவ்வொரு ஆவணியிலும் அஸ்வினி நட்சத்திர தினத்தன்று குருபூஜை நடக்கும். இவ்வூர் மக்களின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க ஸ்வாமிகள் பல ஊருணிகளை அமைத்துள்ளார் என ஒரு குறிப்பு கூறுகிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.