அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் (தூத்துக்குடி)

God Name : சங்கர ராமேஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

கிருஷ்ணகிரி

Call : +91-

சூர சம்ஹாரம் முடிந்து, பின் இந்திரனின் மகள் தெய்வயானையை முருகப் பெருமான் மணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்கு வந்த சிவபெருமானும் பார்வதி தேவியும், சோலைகள் சூழ்ந்த இந்த ஸ்தலத்தில் தங்கியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. அப்போது உமையவள் வேதங்களின் விளக்கமாக திருமந்திரத்தை உபதேசிக்குமாறு வேண்டினாள். திருமந்திர உபதேசம் பெற்ற ஸ்தலம் என்பதால் 'திருமந்திர நகர்' எனப் பெயருற்றது. ஸ்ரீ ராமரால் பூஜிக்கப்பட்ட இறைவன் என்பதால் இவ்விறைவனுக்கு 'சங்கர ராமேஸ்வரர்' என்ற பெயர். இத்தலத்தில் வீரபாகு ஸ்வாமியை வழிபட்டு சூரபத்மனிடம் தூது சென்றதால் 'தூதுகுடி' எனப் பெயருற்று, பின் மருவி 'தூத்துக்குடி' என்றானதாகக் கூறப்படுகிறது. கிணறுகள் எல்லாம் தூர்ந்து போய் தண்ணீர் தட்டுப்பாடு வருமாம். தூர்வாரி தூர்வாரிதான் தண்ணீர் இறைப்பார்கள். இதனால் 'தூத்துக்குடி' எனப் பெயர் வந்ததாகவும் கூறப்படுவதுண்டு. மேலூர், கீழூர் என இரண்டு பகுதிகளாக உள்ள இவ்வூரில், மேலூரின் நடுவே இக்கோவில் அமைந்துள்ளது.
மூலவர்: சங்கர ராமேஸ்வரர், அம்பாள்: பாகம் பிரியாள். மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக மூலவரான சங்கர ராமேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இது பார்வதி தேவியாரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம். தெற்கு நோக்கிய தனி சந்நிதியில் அம்பாள் பாகம் பிரியாள் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள். இங்கு பஞ்ச லிங்கங்கள், லட்சுமி, சரஸ்வதி, பைரவர் மற்றும் அறுபத்துமூவர் ஆகியோரை தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.