அருள்மிகு ஸ்ரீ வெற்றிருக்கைப் பெருமாள் திருக்கோவில் (ஸ்ரீவரகுணமங்கை - நத்தம்)

God Name : மூலவர்: விஜயாஸனர், பரமபதநாதர்் உற்சவர்: எம் இடர் கடிவான்

திருக்கழுக்குன்றம் கோவில்

கிருஷ்ணகிரி

Call : +91-

வேதவித் என்ற அந்தணன் மாதா, பிதா, குரு ஆகியோர்க்கு பணிவிடை செய்து கொண்டும், ஜபதபங்கள் செய்து கொண்டும் ஒழுக்கசீலனாக வாழ்ந்து வந்தான். ஸ்ரீமந் நாராயணனை குறித்து தவம் மேற்கொண்டான். சிரத்தையாக தவம் செய்ததின் பயனாக அவன் முன் பிரத்யட்சமான எம்பெருமானிடம், இத்தலத்திலேயே எழுந்தருளி சேவார்த்திகளுக்கு அருளுமாறு வேண்டியதின்பேரில், இங்கேயே கோவில் கொண்டார் என ஸ்தல வரலாறு. அக்னி பகவான், உரோமச முனிவர், உரோமச முனிவரின் சீடர், சத்யவான் ஆகியோர்க்கு பிரத்யட்சம் ஆனதாக ஐதீகம். அகநாச தீர்த்தக் குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த செம்படவன் ஒருவனை கொடிய நாகம் ஒன்று தீண்டியதால் அவன் இறந்தான். அவனது சரீரத்தை பட்சிகள் புசிக்க, ஆத்மா சொர்க்கலோகம் சென்றது. ரோமச முனிவரிடம் இதன் காரணத்தை கேட்டான் அவரது சீடனான சத்யவான். அவனது முன்வினை தீய பயனால் அவன் அழிந்தான் என்றும், வரகுணமங்கையில் பிறந்ததால் சொர்க்கம் சென்றான் எனவும் உரோமச முனிவர் கூறினார்.
மூலவர்: விஜயாஸனர், பரமபதநாதர்் உற்சவர்: எம் இடர் கடிவான். தாயார்: வரகுணமங்கை, வரகுணவல்லி. மூலஸ்தானத்தில் மூலவராக விஜயாஸனர் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு வீற்றிருந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இவருக்கு வெற்றிருக்கைப் பெருமாள் என்ற திருநாமமும் உண்டு. ஆதிசேஷன் குடையாக எழுந்தருளியுள்ளார். உற்சவராக எம் இடர் கடிவான் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீதேவி, பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். பக்தர்களின் இடர் களைந்திடும் எம்பெருமானின் அழகிய திருமேனியை பார்த்துக் கொண்டே இருக்கலாம். தாயார் வரகுணமங்கை என்கிற வரகுணவல்லி வரப்பிரசாதியாக எழுந்தருளியுள்ளார். 108 திவ்ய தேசங்களுள் ஒன்று - நவ திருப்பதிகளுள் ஒன்று (2) - சந்திரன் ஸ்தலம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.