அருள்மிகு முப்புராதி அம்மன் திருக்கோவில் (காயாமொழி)
God Name : -
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
கிருஷ்ணகிரி
Call : +91-
தாரகாட்சன், வித்யுன்மால், வாணன் ஆகிய மூன்று அசுரர்கள் கடுந்தவம் புரிந்து தங்கக் கோட்டை, வெள்ளிக் கோட்டை, செம்புக் கோட்டை என மூன்று கோட்டைகளை நிர்மாணித்தனர். இவை திரிபுரம் (அ) முப்புரம் எனப் பெயர் கொண்டவை. இவற்றைப் பாதுகாக்க பரிபாலன தெய்வம் ஒன்றை ஸ்தாபித்து வழிபட்டனர். முப்புராதியர்கள் வழிபட்டதால் முப்புராதி அம்மன் என்ற பெயரைக் கொண்டாள். இவர்கள் செய்யும் அட்டகாசத்தைத் தாங்க முடியாமல், இவர்களால் துன்பப்பட்ட தேவர்கள் இறைவனிடம் முறையிட்டனர். இவர்களைப் பாதுகாக்க விநாயகர், முருகன், சூரியன் ஆகியோர் அனுப்பப்பட்டனர். இந்த மூன்று தெய்வங்களையும் உபசரித்து கோட்டையிலேயே தங்க வைத்துவிட்டனர் அசுரர்கள். பின்பு வீரபத்திரரை அனுப்பி இவர்களை மீட்க வேண்டியதாயிற்று. தந்திரமாக முப்புராதி அம்மனைக் கோட்டையிலிருந்து வெளியேற்றிக் கயிலைக்கு வரச் செய்துவிட்டு, கோட்டைகளை அழித்தார் சிவபெருமான் என ஸ்தல வரலாறு கூறுகிறது. அம்மை நோயை 'முத்து போட்டுள்ளது' எனக் கூறுவர். இந்நோயை முற்றிலுமாக ஆற்றி குணப்படுத்துவதால் 'முத்து - ஆற்று - அம்மன்' என்பதன் சுருக்கமாக 'முத்தாரம்மன்' என்றும் போற்றுகின்றனர். அம்மை நோய் கண்டவர்கள் இங்கு வந்து பீடத்தைச் சுற்றி நீர் கட்டித் தேக்கி வைத்து, பிரார்த்தித்து நிவாரணம் பெறுகின்றனர்.
மூலஸ்தானத்தில் மூலவராக அன்னை முப்புராதி ஒரு பீடத்தில் கொலுவிருந்து அருள் புரிகின்றாள். சுயம்பு வடிவானவள். இவளை முப்பிடாரி என்றும் திரிபுரசுந்தரி என்றும் அழைக்கின்றனர். சுவாமியின் ஆற்றலை அன்னை வாங்கி சிவமயமாக வீற்றிருப்பதாகக் கூறுவர். இடதுபுறமாக வீரபத்திர சுவாமியும் வலதுபுறமாக பைரவரும் எழுந்தருளியுள்ளனர். மடப்பள்ளியை அடுத்து மாரியம்மன் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கின்றாள். மகாமண்டபத்தின் மேற்புறமாக ஆதித்த விநாயகர் சந்நிதி கொண்டு ஆசி வழங்குகின்றார். சி.பா.ஆதித்தனார் மண்டபம் என்று கூறுவார்கள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.