அருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோவில் (ஆற்றூர்)
God Name : சோமநாத சுவாமி
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
கிருஷ்ணகிரி
Call : +91-
குரு பகவானின் சாபத்தால் தனது கலைகளை இழந்த சந்திரன் இத்தலத்திற்கு வந்து ஒரு தீர்த்தத்தை அமைத்து, இவ்விறைவனை வழிபட்டு தனது சாபத்தைப் போக்கிக் கொண்டான் என ஸ்தல வரலாறு கூறுகிறது. இதனால் இவ்விறைவன் சோமநாத சுவாமி என்ற திருநாமம் கொண்டார்.
ஒரு காலத்தில் இப்பகுதி பசுக்களின் மேய்ச்சல் இடமாக இருந்தபோது, அப்பகுதியை ஆண்ட அரசன் ஒரு ஆலமரத்தடியில் பசுக்கள் பால் சொரிவதைக் கண்டான். அதன் காரணத்தை அறிய மரத்தை வெட்ட முற்பட்டபோது, குருதி பெருகுவதைக் கண்டு பயந்து வெட்டுவதை நிறுத்திவிட்டான். அன்றிரவு அவனது கனவில் தோன்றிய இறைவன், தாம் ஆலமரத்தின் தூரில் இருப்பதாகத் தெரிவித்தார் எனவும், அதை வெளிக்கொணர்ந்து அரசன் ஆலயம் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.
ஆலமரத்து தூரிலிருந்து இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால், இவ்வூர் ஆலந்தூர் என்றழைக்கப்பட்டு, பின்னாளில் மருவி ஆற்றூர் என்றானதாகக் கூறப்படுகிறது.
மூலவர்: சோமநாத சுவாமி, அம்பாள்: சோமசுந்தரி.
மூலவரான சோமநாத சுவாமி சிவலிங்க வடிவில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ளார். கிழக்கு நோக்கிய சந்நிதியில் அன்னை சோமசுந்தரி எழுந்தருளி அருள்பாலிக்கிறாள்.
சூரியன், சந்திரன், சப்த கன்னிகைகள், தட்சிணாமூர்த்தி, சிவகாமி உடனாய நடராஜர், வள்ளி - தெய்வயானை சமேத சுப்ரமண்யர், 63 நாயன்மார்கள் ஆகியோரை வலச்சுற்றில் தரிசிக்கலாம். மிகப் பெரிய திருவுருவமாக பைரவ மூர்த்தி எழுந்தருளியுள்ளார்.
உற்சவ மூர்த்திகளாக சோமாஸ்கந்தர், சோமசுந்தரி, சனீஸ்வரர், பரமபதநாதர் எனப்படும் அனந்தபத்மநாபன் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம்.
சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய மகாமண்டபம் அவசியம் காண வேண்டிய ஒன்று. அதில் காணப்படும் பசு பால் சொரியும் காட்சி அழகாக உள்ளது. கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பிரசவம் பார்க்கும் காட்சி ஒரு தூணில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. சுகப்பிரசவம் வேண்டி கர்ப்பிணிப் பெண்கள் இங்கு வழிபடுகின்றனர். மற்றொரு தூணில் காணப்படும் ஹனுமனின் சிற்பம் அழகாக உள்ளது.
அனந்த பத்மநாபர் சிவலிங்கத்தைப் பூஜிக்கும் தோற்றத்தில் சேவை சாதிக்கிறார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.