அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் (ராஜபதி)
God Name : ஸ்ரீ கைலாசநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
கிருஷ்ணகிரி
Call : +91-
உரோமச முனிவர் தமது குருவான அகத்தியப் பெருமானிடம், சிவ கடாட்சம் பெற்று முக்தியடைய வழி கேட்டார்.
அதற்கு அகத்தியர், "நீ பொருநை ஆற்றின் கரை வழியாக சங்கு முகம் வரைக்கும் செல். உனக்கு வழி காட்ட ஆற்று நீரில் ஒன்பது மலர்களை விடுகிறேன். ஒவ்வொரு மலரும் எந்த இடத்தில் ஒதுங்குகிறதோ, அங்கெல்லாம் சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபடு" என்றார். (சங்கு முகம் என்பது பொருநை ஆறு கடலில் சங்கமிக்கும் இடம்).
அகத்தியர் கூறியபடியே உரோமச முனிவரும் ஒவ்வொரு பூ கரை ஒதுங்கிய இடங்களில் (ஆற்றின் இரு கரைகளிலும்) சிவலிங்கம் நிறுவி வழிபட்டார். மிதந்து வந்த மலர்களுள் எட்டாவது மலர் கரை ஒதுங்கிய இடமே ராஜபதி.
ஒவ்வொருவர் ஜாதகத்திலும் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட கிரகங்களின் தசை ஆட்சி புரியும். ஒவ்வொரு தசைக்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதி. ஒவ்வொரு தசையின்போதும் எந்தக் கோவிலுக்குச் சென்று வழிபட்டால் நற்பயன் பெறலாம் என விளக்க சிவபெருமான் அந்தந்த கிரகங்களாக இருந்து அருள்புரிவதாக ஐதீகம்.
இக்கோவில் முற்றிலுமாக பொருநை ஆற்றின் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு அழிந்தது (1648ஆம் வருஷம்) என்றும், கோவில்பட்டியைச் சேர்ந்த சைவ சமயத்தினரும் சிவ பக்தர்களுமாகச் சேர்ந்து சிவ ஆகம முறைப்படி இக்கோவிலைப் புதுப்பித்ததாகக் குறிப்பொன்று கூறுகிறது.
மூலவர்: ஸ்ரீ கைலாசநாதர், அம்பாள்: சௌந்தரநாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக ஸ்ரீ கைலாசநாதர் எழுந்தருளியுள்ளார். லிங்கத் திருமேனியின் நான்கு பக்கங்களிலும் நான்கு சக்கர வடிவங்கள் இருக்கின்றன. ஞானகாரகனான கேதுவின் அம்சமாக கைலாசநாதர் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம்.
அம்பாள் சௌந்தரநாயகி எனப்படும் பொன்னம்மை சௌந்தர்யமான தோற்றத்துடன் காட்சி தருகிறார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.