அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோவில் (குதிரைமொழி)

God Name : கற்குவேல் அய்யனார்

திருக்கழுக்குன்றம் கோவில்

கிருஷ்ணகிரி

Call : +91-

தேரிக்குடியைச் சேர்ந்த மக்கள், தங்களது செல்வங்களை கொள்ளையர்கள் எடுத்துச் சென்று விட்டதை அய்யனாரிடம் முறையிட்டனர். கொள்ளையர்களை பிடித்து செல்வங்களை மீட்டுத் தரும் சக்தியை வன்னியராஜவுக்கு வழங்கினார் அய்யனார். கொள்ளையர்களை பிடித்து சிரச்சேதம் செய்து பொருட்களை மீட்டு மக்களிடம் தந்தார் வன்னியராஜா. இந்த அற்புத நிகழ்வை கள்ளர் வெட்டு விழா எனக் கொண்டாடுகின்றனர். கார்த்திகை மாதத்தில் ஆறு நாட்கள் கொண்டாடுகின்றனர். கடைசி 3 நாட்கள் விசேஷ ஆராதனைகள் நடக்கும். முதல் நாள் அய்யனாரையும் தேவியர்களையும் பச்சரிசி மாவினால் அலங்கரிப்பார்கள். அடுத்த நாள் சந்தன அலங்காரம். கடைசி நாளன்று தாமிரபரணி தீர்த்தத்தை 11 கலசங்களில் கொண்டு வந்து அய்யனாருக்கு அபிஷேகம் செய்வார்கள். கள்வர் சாமியாடியை கயிற்றினால் கட்டி அவரது தலையில் இளநீர் காயை வைப்பார்கள். வன்னியராஜா துரத்திச் சென்று இளநீர் காயை வெட்டி சாய்ப்பார். அதற்குள் இருக்கும் குங்குமம் கலந்த இளநீர் நாற்புறமும் சிதறும். இதுவே கள்ளர் வெட்டு விழா.
பிரதான கருவறையில் மூலவராக கற்குவேல் அய்யனார் அமர்ந்து ஆசி வழங்குகின்றார். தமது வலது பாதத்தை தாமரையில் வைத்தும், இடது காலை மடக்கியபடியும் அமர்ந்துள்ளார். பூரணா - புஷ்களா தேவியர்கள் உடன் உள்ளனர். எதிரே குதிரை. வலப்புறமாக புலமாடன், புலமாடியம்மன் மற்றும் கள்வர்சாமி ஆகியோரும் இடப்புறமாக பட்டவராயன், பொம்மக்கா, பலவேசக்காரன் ஆகியோரும் சந்நிதி கொண்டுள்ளனர். வலச்சுற்றில் துப்பாக்கிமாடசாமி, உதிரமாடன், மரக்கடாசாமி, பிணமாலை சூடும் பெருமான், இருளப்பவீரன், சேலைக்காரம்மன், தளவாய் மாடன், ஓடைக்கார மாடசாமி, பேச்சியம்மன், லாட சந்யாசி, உச்சி மகாகாளி, பெரியசாமி ஆகிய கிராமிய காவல் தெய்வங்கள் காணப்படுகின்றனர். கற்குவேல் எனும் மரத்திலிருந்து தோன்றியதால் கற்குவேல் அய்யனார் என்று அழைக்கப்படுகிறார். தெற்கே சுடலைமாடன் கோவில் உள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.