அருள்மிகு புன்னை ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் (வனத்திருப்பதி)
God Name : ஸ்ரீநிவாசப் பெருமாள், ஸ்ரீ ஆதி நாராயணப் பெருமாள், சிவனணைந்த பெருமாள்
திருக்கழுக்குன்றம் கோவில்
கிருஷ்ணகிரி
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீநிவாசப் பெருமாள் எழுந்தருளி தரிசனம் தருகின்றார். திருப்பதி பெருமாளைப் போலவே சகல அலங்காரங்களுடன் கம்பீரமாக காட்சி தருகின்றார். தீபாராதனை ஒளியில் சேவிக்க ஆனந்தம் கிடைக்கிறது. பெருமாளின் வலது கரத்தில் சூரிய வெளிச்சம் தொடர்ந்து படர்ந்து சூரிய பூஜை செய்கின்றது.
சந்தான ஸ்ரீநிவாசராக அருள் பாலிப்பதால் குழந்தைப்பேறு வேண்டுபவர்களுக்கு நல்ல பலன் இருப்பதாக பட்டாச்சார்யார் தெரிவிக்கின்றார். லட்டு பிரசாதமாக தருகின்றனர்.
அடுத்துள்ள சந்நிதியில் ஸ்ரீ ஆதி நாராயணப் பெருமாள் சேவை சாதிக்க, அவருக்கு முன்பாக சிவனணைந்த பெருமாள் எழுந்தருளி அருள் புரிகின்றார்.
பிற சந்நிதிகளில் ராஜ கணபதி, பக்த ஆஞ்சநேயர், வடபழநி ஆண்டவர், தட்சிணாமூர்த்தி, குருவாயூரப்பன், விஷ்ணு துர்க்கை, பிரம்மா, கருடன், திருத்தணி முருகன், ஆண்டாள், மன்னை ராஜகோபாலஸ்வாமி ஆகியோர் கோவில் கொண்டுள்ளனர்.
கொடிமரத்தைக் கடந்து ஐந்து படிக்கட்டுக்கள் ஏறிச் சென்றால் சக்கரத்தாழ்வாரையும், யோக நரசிம்மரையும் சேவிக்கலாம். கோவிலின் உட்பிரகாரத்தில் புடைப்பு சிற்பங்களாக திருமாலின் பத்து அவதாரங்களை சித்தரித்துள்ளனர்.
மூலவருக்கு எதிரில் இரண்டு பக்கங்களிலும் பரிவார தெய்வங்கள். ஸ்ரீ பூக்கன் பலவேசம், சுப்பாணி முத்து, ஸ்ரீ லாடகுரு சந்யாசி, முத்துப்பிள்ளை, இருளப்பர், நட்டாணி பலவேசம் போன்ற கிராம தேவதைகளின் சிலைகளை தரிசிக்கலாம். இங்கேயும் பிரசாத விநியோகம்.
ஸ்ரீ வைகுண்டம் பெரிய திருவடி பட்டாச்சார்யாரின் ஆலோசனைப்படி, எஸ்.கணேசன் எனும் சிற்பி கோவிலை வடிவமைத்துள்ளார். ஹோட்டல் சரவணாபவன் ராஜகோபால் அவர்களால் கட்டப்பட்ட கோவில்.
கோவிலுக்குள் எங்கேயும் உண்டியல் இல்லை. தங்க சடாரி சாத்துகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.