அருள்மிகு செந்தாமரைக் கண்ணன் திருக்கோவில் (இரட்டை திருப்பதி)
God Name : மூலவர்: அரவிந்தலோசனர்் உற்சவர்: செந்தாமரைக் கண்ணன்
திருக்கழுக்குன்றம் கோவில்
கிருஷ்ணகிரி
Call : +91-
அடுத்தடுத்து இரண்டு கோவில்கள் இருப்பதால் இதை இரட்டை திருப்பதி என்பார்கள். வடக்கு கோவில் - தெற்கு கோவில் என்று அழைக்கின்றனர்.
துலைவில்லி மங்கலத்தில் யாகம் நடத்திய சுப்ரப முனிவர், அங்குள்ள தேவர்பிரான் சந்நிதிக்கு வடக்கே உள்ள பொய்கையின் தாமரைப் பூக்களைப் பறித்துச் சென்று எம்பெருமானுக்குச் சாற்றி மகிழ்வது வழக்கம். ஒரு நாள், அவரைப் பின்தொடர்ந்து தாமரைப் பொய்கைக்கு வந்த எம்பெருமான், பொய்கையும் அதன் சுற்றுப்புறமும் அழகாக இருப்பதைக் கண்ணுற்று, குளிர்ச்சியான இச்சோலையில் தாம் எழுந்தருள விரும்புவதாகத் தெரிவித்துவிட்டு, அரவிந்தலோசனராகக் கோவில் கொண்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
யாகங்களின் மூலம் கிடைக்கும் பலன்கள் யாவும் தேவர்களையே சென்றடைகிறது - எங்களுக்கு ஹவிர்பாகம் தருவதில்லை என அஸ்வினி தேவர்கள் பிரம்மனிடம் முறையிட்டனர். பிரம்ம தேவரின் யோசனைப்படி துலைவில்லி மங்கலத்திற்கு வந்த அஸ்வினி தேவர்கள், அங்கு தவமிருந்தனர். பிரத்யட்சமான அரவிந்தலோசனர் அவர்களுக்கும் ஹவிர்பாகம் கிடைக்க அருள் புரிந்தார்.
மூலவர்: அரவிந்தலோசனர்் உற்சவர்: செந்தாமரைக் கண்ணன்் தாயார்: கருந்தடங்கண்ணி.
மூலஸ்தானத்தில் மூலவராக அரவிந்தலோசனர் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு வீற்றிருந்த கோலத்தில் காட்சி தருகின்றார். உற்சவரான செந்தாமரைக் கண்ணன் பேரெழிலுடன் காட்சி தருகின்றார். நின்ற திருக்கோலம். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். தாயார் கருந்தடங்கண்ணி அழகே உருவாக எழுந்தருளியுள்ளார்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று - நவ திருப்பதிகளுள் ஒன்று (6) - கேது ஸ்தலம்.
ஸ்ரீ தேவர்பிரான் திருக்கோவில் மற்றும் ஸ்ரீ செந்தாமரைக் கண்ணன் திருக்கோவில் இரண்டையும் சேர்த்து ஒரே கோவிலாக மங்களாசாஸனம் செய்துள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.