அருள்மிகு வேங்கடவாணன் திருக்கோவில் (திருக்குளந்தை - பெருங்குளம்)

God Name : மூலவர்: வேங்கடவாணன்் உற்சவர்: மாயக்கூத்தன்

திருக்கழுக்குன்றம் கோவில்

கிருஷ்ணகிரி

Call : +91-

வேதசாரன் - குமுதவல்லி எனும் பிராமண தம்பதியினர், எம்பெருமானிடம் குழந்தைப்பேறு வேண்டி நின்றனர். அலர்மேல்மங்கைத் தாயாரே அவர்களுக்கு மகளாக அவதரித்து கமலாவதி என்ற பெயரில் வளர்ந்து வந்தாள். வேங்கடவாணனையே மணந்து கொள்ள விரும்பி தவம் மேற்கொண்டாள். பிரத்யட்சமான ஸ்வாமி, அவளை ஏற்றுக்கொண்டு தனது கௌஸ்துப மணிமாலையோடு ஆலிங்கனம் செய்து கொண்டார். அதிலிருந்து பரந்தாமனின் மார்பில் தாயார் அமர்ந்து காட்சி தருகிறாள். அசுரன் ஒருவன் வேதசாரனின் மனைவி குமுதவல்லியை கவர்ந்து சென்று ஒரு குகையில் ஒளித்து வைத்து விட்டான். செய்வதறியாது திகைத்த வேதசாரன் பெருமாளை சரண் அடைந்தான். பக்தனுக்காக கருடன் மீது ஏறி பயணித்தார் ஸ்வாமி. ஸ்வாமிக்கு துணை என்றும் நான்தானே என்ற எண்ணம் கருடனுக்கு தோன்றவே, தனது கால் இடுக்கில் கருடனை வைத்துக் கொண்டு பயணித்தார். கருடனின் கர்வமும் அடங்கியது. பின்னர் குமுதவல்லியை சிறை மீட்டுக்கொண்டு வந்தார். இதை அறிந்த அசுரன் திருக்குளந்தைக்கு வந்து பெருமாளோடு போரிட்டான். அவனை பொருணை ஆற்றின் கரையில் தள்ளி அவனது தலை மீது ஏறி கூத்தாடினார். இதனால் மாயக்கூத்தன் என்ற திருநாமம் கொண்டார். இப்பகுதியில் பெருங்குளம் ஒன்று உள்ளது. இக்குளத்திலிருந்து பார்த்தால் சூரியன், பெருமாள், சிவபெருமான் ஆகிய மூவரையும் தரிசிக்கலாம். "ஆதித்யம் அம்பிகாம் விஷ்ணும் கணநாதம் மகேஸ்வரம் பஞ்ச தேவா ஸ்மரேந்நித்யம் மகாபாப நாசனம்" என்ற ஸ்லோகம் பெருங்குளத்தில் கடைபிடிக்கப்படுகிறது.
மூலவர்: வேங்கடவாணன்் உற்சவர்: மாயக்கூத்தன். தாயார்கள்: குளந்தைவல்லி, அலர்மேல்மங்கை. மூலஸ்தானத்தில் மூலவரான வேங்கடவாணன் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். திருவிளக்கின் சுடர் எப்போதும் அசைந்து கொண்டிருக்கும். ப்ரஹஸ்பதிக்கு பிரத்யட்சம் ஆனதாக ஐதீகம். மூலவராகிய வேங்கடவாணனுக்கு திருமஞ்சனம் கிடையாது. பூச்சட்டை சாத்துகின்றனர். மூலவர்க்கு சாத்திய பூச்சட்டையை மறுநாள் கருடாழ்வாருக்கு சாத்துவது வழக்கம். உற்சவ மூர்த்தியான மாயக்கூத்தர், ஸ்ரீதேவி - பூதேவி தேவியர்களுடன் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். சாரநாதன் என்ற திருநாமமும் உண்டு. தாயார் அலர்மேல்மங்கை கமலாவதி என்ற திருநாமத்துடன் வேங்கடவாணனின் மார்பில் அமர்ந்து காட்சியளிப்பதால் தனி சந்நிதி கிடையாது. கருட பகவான் எம்பெருமானுக்கு சமமாக ஆசனம் கொண்டு உற்சவராக சேவை சாதிக்கின்றார். 108 திவ்ய தேசங்களுள் ஒன்று - நவ திருப்பதிகளுள் ஒன்று (4) - சனீஸ்வரர் ஸ்தலம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.