அருள்மிகு ஸ்வாமிநாத ஸ்வாமி திருக்கோவில் (குமரன் குன்றம்)

God Name : மூலவர்: ஸ்ரீ ஸ்வாமிநாத ஸ்வாமி, உற்சவர்: சுப்ரமணிய சுவாமி மற்றும் ஸ்ரீ சுந்தரேஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

காஞ்சிபுரம்

Call : +91-

108 கருங்கல் படிகள் ஏறிச் செல்ல வேண்டிய குன்றின் மீது அமைந்துள்ளது. அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள விநாயகரை தரிசித்து ஆசி பெற்று படிகள் ஏறத் தொடங்குகின்றனர். இடும்பனை வணங்கிவிட்டு படியேறி குன்றை அடையலாம். அடிவாரத்தில் ஜய மங்கள தன்ம காளி எனப்படும் காளீஸ்வரியின் திருவுருவத்தை பிரதிஷ்டை செய்துள்ளனர். அடிவாரத்திலிருந்து 60 படிகள் ஏறிச் சென்றதும் ஸ்ரீ சுந்தரேஸ்வரரையும் ஸ்ரீ மீனாட்சியையும் தரிசிக்கலாம். மஹா பெரியவர் காசியில் இருந்தபோது, பாணலிங்கங்களில் இருந்து ஒன்றை தேர்வு செய்து தந்தருளினார் எனக் குறிப்பொன்று கூறுகின்றது. குன்றின் உச்சியில் உள்ள மூலஸ்தானத்தில் ஸ்ரீ ஸ்வாமிநாத ஸ்வாமி மூலவராக எழுந்தருளியுள்ளார். கையில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றார். உற்சவர் சுப்ரமணிய சுவாமி. அருகே யானை வாகனம் நிற்கின்றது. துவாரபாலகர்களாக ஜயன் மற்றும் விஜயன் காவல் புரிகின்றனர். ஞானபீடம் எனப் போற்றப்படுகிறது. உட்பிரகாரத்தில் சரபேஸ்வரர், குமார கணபதி, சுமித்ர சண்டிகேஸ்வரர், நடராஜர், துர்க்கை மற்றும் உற்சவ மூர்த்திகளின் சந்நிதிகள் உள்ளன. ஆதி சங்கரரின் பெயரில் வேத பாடசாலை ஒன்று வெகு காலமாக நடத்தப்பட்டு வருகின்றது. அருணகிரிநாதர் அரங்கம் ஒன்றும் உள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.