அருள்மிகு ஸ்ரீ பூமிபாலப் பெருமாள் திருக்கோவில் (திருப்புளியங்குடி)
God Name : மூலவர்: ஸ்ரீ பூமிபாலர், உற்சவர்: காய்சினவேந்தன்
திருக்கழுக்குன்றம் கோவில்
கிருஷ்ணகிரி
Call : +91-
மலர்மகளுடன் கருடவாகனத்தில் ஏறி பொருணை ஆற்றின் கரையிலுள்ள ரம்யமான இடங்களை பார்த்து சந்தோஷித்துக் கொண்டிருந்தார் எம்பெருமான். இதைக் கண்ணுற்ற பூமகள் கோபித்துக் கொண்டு பாதாள லோகம் சென்று விட்டாள்.
நிலமகள் இல்லாததால் துன்புற்ற ஜீவராசிகள் எம்பெருமானிடம் சென்று முறையிட்டன.
பாதாளத்திற்கு சென்ற திருமால் நிலமகளை சமாதானம் செய்து அழைத்து வந்தார். இதனால் எம்பெருமான் பூமிபாலர் என்ற திருநாமம் கொண்டார்.
வசிஷ்டரின் சாபத்தால் அசுரனாக மாறிய யக்ஞசர்மா என்பவன் இந்திரன் செய்து கொண்டிருந்த யாகத்தை கலைக்க இடையூறுகள் பல செய்தான். அவனை அழித்து அவனுக்கு நற்கதி அருளிய எம்பெருமான், இந்திரனின் யாகத்தையும் பூர்த்தி செய்ய உதவிய ஸ்தலம்.
மூலவர்: ஸ்ரீ பூமிபாலர், உற்சவர்: காய்சினவேந்தன்.
தாயார்கள்: மலர்மகள் நாச்சியார், பூமகள் நாச்சியார், புளிங்குடிவல்லி.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ பூமிபாலர் புஜங்க சயனமாக சயனித்துள்ளார். கிழக்கே திருமுக மண்டலம் கொண்டுள்ளார். 12 அடி நீளம் கொண்ட அழகிய திருமேனி. ஸ்ரீதேவி - பூதேவி தேவியர்கள் பாதங்களருகே இருக்கின்றனர்.
பெருமாளின் வயிற்றிலிருந்து கிளம்பும் தாமரைக்கொடி, சுவற்றில் இருக்கும் பிரம்மாவின் தாமரை மலரோடு இணைந்தபடி உள்ளது. வெளிப் பிராகாரத்து ஜன்னல் வழியே பார்த்தால்தான் திருவடிகளை சேவிக்கலாம்.
ஒரு சிலா உருவத்தில் பெருமாளின் புஜங்க சயனமும், ஆதிசேஷன் குடை பிடிக்கும் கோலமும் காணலாம்.
உற்சவரான காய்சினவேந்தன் பேரெழிலுடன் காணப்படுகிறார். தாயார் புளியங்குடிவல்லியின் சந்நிதி சாந்நித்யம் மிக்கது.
வருணனுக்கும், தர்மராஜாவுக்கும் பிரத்யட்சமானதாக ஐதீகம்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று - நவ திருப்பதிகளுள் ஒன்று (3) - புதன் ஸ்தலம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.