அருள்மிகு வேங்கடாசலபதி திருக்கோயில் (கருங்குளம்)

God Name : மூலவர்: வேங்கடாசலபதி் உற்சவர்: ஸ்ரீநிவாசப் பெருமாள்

திருக்கழுக்குன்றம் கோவில்

கிருஷ்ணகிரி

Call : +91-

எம்பெருமான் ஆதிசேஷனை அழைத்து தாமிரபரணி நதிக்கரையில் தாம் கோவில் கொள்ள உத்தேசித்து இருப்பதால் நீ அங்கு போய் வகுள மலையாக இரு என்று பணித்தார். அதன்படி தாமிரபரணியின் தென் கரையில் ஆதிசேஷன் வகுளாத்ரியாக விளங்க, பிராட்டியுடன் எம்பெருமான் அங்கு எழுந்தருளினார். முன்நாளில் கல்ஹாரம் என்றழைக்கப்பட்ட ஊரை (இந்நாளில் கராச்சி) ஆண்ட சுபகண்டன் எனும் அரசனுக்கு கண்டமாலை என்ற பிளவை நோய் வந்து அவதியுற்றான். திருமலை - திருப்பதிக்கு வந்து மலை ஏறி ஸ்ரீநிவாசப் பெருமாளை வேண்டி நின்றான். விரதங்கள் பல இருந்து பக்தியுடன் சேவித்தான். அவனது கனவில் தோன்றிய பெருமாள் கூறியபடி அழகிய சந்தனத் தேர் ஒன்று செய்து அர்ப்பணித்தான். மீதமிருந்த இரண்டு பெரிய சந்தனக் கட்டைகளுடன் வகுளகிரிக்கு புறப்பட்டான். வகுளகிரிக்கு வந்ததும் கொண்டு வந்திருந்த இரண்டு சந்தன மரக்கட்டைகளில் வேங்கடாசலபதி ஸ்வாமியை ஆவிர்ப்பவிக்க வேண்டினான். ஆவிர்ப்பவித்த சக்தியுடன் கூடிய சந்தன மரக்கட்டைகள் இரண்டையும் பிணைத்து மூலவராக பிரதிஷ்டை செய்து ஆராதித்தான். கண்டமாலை நோய் நீங்கி நலம் பெற்றான் என ஸ்தல வரலாறு. சித்திரை மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோத்ஸவம் நடைபெறும். சித்ரா பௌர்ணமியன்று கருட வாகனத்தில் பெருமாள் மலையிலிருந்து இறங்கும் காட்சியைக் காண கண் கோடி வேண்டும். புரட்டாசி சனிக்கிழமைகளில் உற்சவ மூர்த்தி புஷ்பாலங்காரத்துடன் கருட வாகனத்தில் தரிசனம் தருவார். முதல் சனிக்கிழமை கருடசேவை.
வகுளாத்ரி மலை - ஆதிசேஷன் போன்று காட்சி தரும் வகுளகிரி ஒரு சிறிய குன்று. ஏறுவதற்கு சிரமம் இருக்காது. வாகனங்கள் செல்லவும் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தில் வேங்கடாசலபதி நீண்ட நெடிய திருவுருவமாக நின்று காட்சி தருகின்றார். சந்தனக் கட்டைகளால் உருவான அழகிய திருமேனி. இரண்டு சந்தனக் கட்டைகள் பிணைக்கப்பட்டு, அவற்றைத் தாங்க மேலிருந்து இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மூலவர் விஷ்ணு அம்சமும் சிவாம்சமும் பொருந்தியவர். மிகுந்த வரப்பிரசாதி. பிரம்ம தேவரே பிரதிஷ்டை செய்ததாகக் கூறுவர். சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவர் மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. ஸ்ரீதேவி - பூதேவி சகிதமாக உற்சவ மூர்த்தி ஸ்ரீநிவாசப் பெருமாள் சேவை சாதிக்கின்றார். பஞ்சலோக திருமேனி அல்லது கற்சிலைக்கு திருமஞ்சனம் செய்வார்கள். மரத்திலான படிமங்களுக்கு திருமஞ்சனம் செய்வதில்லை. இருப்பினும் இத்தலத்தில் ஸ்வாமிக்கு தொடர்ந்து திருமஞ்சனம் செய்கிறார்கள். சிலை சேதமடையாமல் இருப்பது விசேஷம் என்கிறார் பட்டாச்சார்யார். திருமஞ்சனத்திற்காக தாமிரபரணி ஆற்று நீரை இவ்வூர் மக்களே கொண்டு வந்து தருகிறார்கள் எனக் கூறப்படுகிறது. பச்சரிசியை பரப்பி அதன் மீது உடைத்த தேங்காய் மூடிகள் இரண்டை வைத்து அதில் நல்லெண்ணையை ஊற்றி, திரி போட்டு பெருமாளின் முன்பாக வைத்து நீராஞ்சன தீபம் ஏற்றி பிரார்த்திக்கின்றனர். புளியோதரை நைவேத்யம். புளி மற்றும் மிளகாய் வற்றல் சேர்ப்பதில்லை. மிளகும் நெய்யும் சேர்த்து தயார் செய்கின்றனர். திருவோண நட்சத்திர தினங்களில் பால் பாயாசம் அல்லது வெல்ல பாயாசம் நைவேத்யம் செய்து குழந்தைப் பேறு வேண்டி பிரார்த்திக்கின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.