அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோவில் (வசவப்பபுரம்)

God Name : ஸ்ரீ வரதராஜப் பெருமாள்

திருக்கழுக்குன்றம் கோவில்

கிருஷ்ணகிரி

Call : +91-

இவ்வூரைச் சேர்ந்த வணிகன் ஒருவன் பகவானை நேரில் காண வேண்டும் என ஆசை கொண்டு, பண்டிதர் ஒருவரின் பரிந்துரையின் பேரில், ஒரு கல்லை சிரத்தையுடன் வழிபடலானான். அரசனின் படைத்தளபதி, வெறும் கல்லை வணங்கலாகாது, ஆகம முறைப்படி கோவிலுக்கு சென்றுதான் வணங்க வேண்டும் எனக் கூறி கல்லைப் பிடுங்கிக் கொண்டான். அன்றிரவு அரசனின் கனவில் தோன்றிய பகவான் தாம் எங்கும் நிறைந்திருப்பதை உணர்த்தினார். இதனால் தன் தவற்றிற்காக மனம் வருந்திய அரசன், வணிகனைத் தேடிப் பிடித்து அவனது விருப்பப்படி வணங்கலாம் எனக் கூறினார். பின்னர் பெரிய யாகம் ஒன்றை நடத்தினார் அரசன். பிரத்யட்சமான நாராயணனை இங்கேயே கோவில் கொள்ளுமாறு வேண்டினார் என ஸ்தல வரலாறு.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் நெடிய திருவுருவம் கொண்டு, சங்கு - சக்ரதாரியாக, நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். பூமி தேவியும், நீளா தேவியும் உடன் உள்ளனர். கிழக்கு பார்த்த சந்நிதி. முன் மண்டபத்தில் கருடாழ்வரை சேவிக்கலாம். மகா மண்டபத்தில் ஸ்ரீ ராமாநுஜர், பெரியாழ்வார், விஷ்வக்சேனர் ஆகியோரின் திருவுருவங்களை சேவிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.