அருள்மிகு பரிபூரண கிருபேஸ்வரர் திருக்கோவில் (முன்னீர் பள்ளம்)
God Name : ஸ்ரீ பரிபூரண கிருபேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
ஸ்ரீ வல்லபன் எனும் அரசன் தான் வழிபடுவதற்காகவும், பக்தர்கள் வழிபடுவதற்காகவும், அருகேயுள்ள ஊரின் கோவிலில் வழிபடுவதற்காகவும் மூன்று லிங்கங்களை உருவாக்கும் பணியைச் சிற்பிகளிடம் ஒப்படைத்தான்.
அப்போது அங்கு வந்த ஆண்டி ஒருவன் தனக்கும் ஒரு லிங்கம் செய்து தருமாறு சிற்பிகளிடம் கேட்டான். அதற்குச் சிற்பிகள் உடன்படவில்லை. உடனே தனது கையில் வைத்திருந்த மூலிகைச் சாற்றை அந்த மூன்று லிங்கங்களின் மீது வீசினான் ஆண்டி. லிங்கங்கள் தீப்பிழம்பாக மாறின. "ஏன் இப்படிச் செய்தீர்கள்?" என்று அரசன் கேட்டதற்கு, சிற்பி உருவாக்கிய லிங்கங்களில் தேரை குடிகொண்டிருப்பதாகக் கூறினான் ஆண்டி.
"இந்த மூன்று லிங்கங்களையும் ஆற்று நீர், ஊற்று நீர், வேற்று நீர் ஆகிய மூன்று நீர் (முன்னீர்) நிலைகளருகே பிரதிஷ்டை செய்யுமாறு" கூறிவிட்டு ஆண்டி திடீரென மறைந்தான். ஆண்டியாக வந்தது சிவபெருமானே என அரசன் உணர்ந்தான். முன்னீர் நிலைகளருகே பிரதிஷ்டை செய்ததால் இவ்வூர் முன்னீர் பள்ளம் எனப் பெயருற்றது.
தேரை குடிகொண்டிருந்த கற்களில் லிங்கம் செய்ய முற்பட்ட சிற்பிகள் சாபம் பெற்றதால் பல்லிகளாக உருமாறி அம்பாள் சந்நிதியில் உள்ளனர். சாப விமோசனம் வேண்டி, அந்தச் சிற்பிகள் பச்சைக்கல்லில் திருமால் சிலை ஒன்றைச் செய்தனர். அந்தச் சிலையை லட்சுமி நாராயணராக அருகிலுள்ள கோவிலில் காணலாம்.
மூலவர்: ஸ்ரீ பரிபூரண கிருபேஸ்வரர்் அம்பாள்: ஸ்ரீ பரிபூரண கிருபேஸ்வரி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக ஸ்ரீ பரிபூரண கிருபேஸ்வரர் கிழக்கு பார்த்த சந்நிதியில் எழுந்தருளியுள்ளார்.
தெற்கு நோக்கிய சந்நிதியில் அன்னை ஸ்ரீ பரிபூரண கிருபேஸ்வரி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
கயிலாய மண்டபம் என்றழைக்கப்படும் முன் மண்டபத்தில் விநாயகர், ரிஷபாரூடர், வள்ளி - தெய்வயானை தேவியர்களுடன் எழுந்தருளியுள்ள முருகப் பெருமான், அகோர வீரபத்ரர், பதஞ்சலி, ஸ்ரீ ராமர் - சீதா தேவி - லக்ஷ்மணர் - ஹனுமன், பள்ளிகொண்ட பெருமாள், தாயார், பிருங்கி முனிவரின் நந்தி வழிபாடு, வல்லப கணபதி ஆகிய திருவுருவங்களும், இராமாயண, மகாபாரத, தசாவதாரக் காட்சிகளும் புடைப்புச் சிற்பங்களாகக் காட்சியளிக்கின்றன.
பிரகார வலச்சுற்றில் ஆதி சிவன், ஆனந்த நடராஜர், பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, விநாயகர், முருகன், பைரவர், சண்டிகேசர் ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம்.
தலைகீழாக இறங்கும் பல்லியின் கால் இடுக்கில் வேறொரு பல்லியின் வடிவத்தை அம்பாள் கோவிலில் காணலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.