அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோவில் (கிருஷ்ணாபுரம்)
God Name : வெங்கடாஜலபதி பெருமாள்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
பிரதான கருவறையில் மூலவராக வெங்கடாஜலபதி பெருமாள் அழகே உருவாக எழுந்தருளி தரிசனம் தருகிறார். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். பத்மாவதித் தாயார் எழுந்தருளி தரிசனம் தருகிறார். அர்த்த மண்டபம், மகா மண்டபம், மணி மண்டபம், அரங்க மண்டபம் ஆகிய மண்டபங்கள் ஒன்றன் முன் ஒன்றாக உள்ளன. வீரமும் கோபமும் தாண்டவமாட ரௌத்ராகாரமாக மகா மண்டபத்தில் எழுந்தருளியுள்ளார் வீரபத்ரர். முறுக்கு மீசை, மிரட்டும் விழிகள், கோரைப் பற்கள் கொண்டும், கரங்களில் கேடயமும் தோமரமும் கொண்டும் கம்பீரமான தோற்றம் கொண்டு காணப்படுகிறார். நரம்புகளும் தசை நார்களும் தத்ரூபமாக காண்பிக்கப்பட்டுள்ளன. அரங்க மண்டபத்து தூண்களிலுள்ள சிற்பங்கள் அனைத்தும் நம்மை வியக்க வைக்கின்றன. வீரபத்ரருக்கு எதிரே உள்ள தூணில் காணப்படும் பெண்ணின் மூக்கில், மூக்குத்தி அணிவதற்கு ஒரு ஓட்டையைக் கூட வைத்துள்ளான் சிற்பி. யானையும் - காளையும் சேர்ந்த சிற்பம், குறத்தி அரசகுமாரனை தனது தோளில் தூக்கிச் செல்வது போன்ற சிற்பம், கைகளில் பூச்செண்டும் மாதுளம்பழமும் வைத்துக் கொண்டு நாட்டியமாடும் ஒரு மாது என எல்லா சிற்பங்களின் அழகும் நம்மை மலைக்க வைக்கின்றன. ராஜசூய யாகத்திற்கு லிங்கத்துடன் ஓடி வரும் பீமன் - அவனை துரத்தும் புருஷா மிருகம் மிக அற்புதமான படைப்பு. பீமன் தனது எல்லைக்குள் ஒரு காலும், அதன் எல்லைக்குள் ஒரு காலும் வைத்து நிற்கிறான். பீமன் தனக்கு உரியவன் என்று புருஷா மிருகம் தர்மரிடம் வாதாடுகிறது. அதன் எல்லையில் உள்ள பாதி உடலை அது இரையாக எடுத்துக் கொள்ளலாம் என்று தர்மர் தீர்ப்புக் கூறுகிறார். இந்த மஹாபாரதக் கதையை சித்தரிக்கும் இந்த சிற்பம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். அன்னத்தில் பவனி வரும் ரதியை கரும்பு வில்லோடு எதிர்கொள்ளும் மன்மதன் - இந்த சிற்பம் கொள்ளை அழகுடன் காணப்படுகிறது. இசை ஒலியை எழுப்பும் கற்களில் வடிவமைத்த சிற்பங்கள். ராஜகோபுரமே அழகாக உள்ளது. இவ்வூரில் கிருஷ்ண ஈஸ்வரர் கோவிலொன்றும் இருக்கின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.