அருள்மிகு நவநீத கிருஷ்ணன் திருக் கோவில் (மருதூர்)
God Name : நவநீத கிருஷ்ணன்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
பாலகனாக இருக்கும்போது கிருஷ்ணன் செய்த குறும்புகளை பொறுக்க முடியாமல் அவனது தாய் யசோதை, குட்டி கிருஷ்ணனை உரலில் கட்டிப் போடுகிறாள். கட்டிய உரலுடன் தவழ்ந்த கிருஷ்ணன் இரண்டு மருத மரங்களுக்கு இடையே செல்ல முற்பட்டான். மரங்களுக்கிடையே உரல் சிக்கிக் கொண்டதால் மரங்களிரண்டும் ஒடிந்து விழுந்தன. நளகூபன் - மணீக்கீரிவன் ஆகிய இரண்டு கந்தர்வர்களே மருத மரங்களாக இருந்தமையால் கிருஷ்ணரால் விமோசனம் பெற்றனர். குழந்தைப்பேறு வேண்டி நிற்பவர்கள் தாமிரபரணியில் ஸ்நானம் செய்து, நவநீதகிருஷ்ணனை வேண்டி நற்பயனை அடைகின்றனர். வெண்ணெய், பால் பாயாசம் நைவேத்யம் செய்கின்றனர்.
மூலஸ்தானத்தில் மூலவரான நவநீத கிருஷ்ணன் நான்கடி உயரம் கொண்ட திருமேனியுடன் அழகே உருவாக காட்சி தருகின்றார். பாலக வடிவத்தில் இரண்டடி உயரம் கொண்ட ஐம்பொன் சிலையாக உற்சவ மூர்த்தி சேவை சாதிக்கின்றார். இரண்டு கைகளிலும் வெண்ணை உருண்டைகளை வைத்துள்ளார். கருடாழ்வார் சிலை அழகாக இருக்கின்றது. இவ்வூரில் ஆதிமருதீஸ்வரர் சிவாலயமும், சாஸ்தா கோவிலும், வடக்கு வாசல் செல்வி கோவிலும் உள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.