அருள்மிகு சீவலப்பேரி துர்க்கையம்மன் திருக் கோவில் (சீவலப்பேரி)

God Name : -

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

பூமியை சமதளப்படுத்த தென்திசைக்கு வந்த அகஸ்தியர், நித்ய அனுஷ்டானங்களை செய்யாததால் தவ வலிமை குறைந்து கொண்டே வந்தது. அப்போது கேட்ட அசரீரியின்படி துர்க்கையை வழிபட்டு இழந்த தவ வலிமையைப் பெறுவதற்காக, தாமிரபரணி - சித்ரா நதி - கோதண்டராம நதி ஆகிய மூன்றும் சங்கமிக்கும் முக்கூடல் என்கிற தட்சிண பிரயாகையில் நீராடி துர்க்கையை வழிபட சீவலப்பேரி எனும் இத்தலத்திற்கு வந்தார். பின்னர் துர்க்கையை அமர்ந்த கோலத்திலும், விஷ்ணு மூர்த்தியை நின்ற கோலத்திலும் பிரதிஷ்டை செய்து வழிபட்டு இழந்த தவ வலிமையை மீண்டும் பெற்றார் என ஸ்தல வரலாறு. தேவாசுர யுத்தத்தில் தோற்கவிருந்த அசுரர்களை காப்பாற்ற முற்பட்டாள் சுக்ராச்சார்யாரின் தாயாரான கியாதி என்பவள். தேவர்களுக்கு அபயம் தந்த விஷ்ணு மூர்த்தி தனது சுதர்ஸன சக்கரத்தை ஏவி கியாதியை சம்ஹாரம் செய்ய பணித்தார். கியாதியின் தலையை அறுத்த பின்னர் விஷ்ணுவிடம் திரும்பி சென்றடையாமல் சுற்றிக் கொண்டு இருந்த சக்கரம், வழியில் தென்பட்ட கபில முனிவரிடம் காரணம் கேட்டறிந்தது. கபில முனிவர் கூறிய யோசனைப்படி ஒரு பெண்ணை வதைத்த தோஷத்தைப் போக்கிக் கொள்ள இத்தலத்திற்கு வந்த சக்கரம் துர்க்கையையும் விஷ்ணுவையும் வழிபட்டு தோஷத்தைப் போக்கிக் கொண்டது. பின்னர் விஷ்ணு மூர்த்தியிடம் திரும்ப சென்றடைந்தது என ஸ்தல வரலாறு. வல்லப பாண்டியன் இவ்வூரை ஆண்டபோது பெரிய ஏரி ஒன்றை உண்டாக்கினான். அதற்கு ஸ்ரீ வல்லப ஏரி என்று பெயர். அந்தப் பெயரே நாளடைவில் மருவி சீவலப்பேரி என்றானது.
மூலஸ்தானத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் விஷ்ணு துர்க்கை சௌம்ய - சாந்த - அனுக்ரஹ தேவியாக தரிசனம் தருகின்றாள். சொல்லி வரம் கொடுக்கும் துர்க்கை எங்கள் சீவலப்பேரி துர்க்கை எனக் கொண்டாடுகின்றனர். துர்க்கையின் உற்சவ மூர்த்தி பேரெழிலுடன் காட்சி தருகின்றாள். அருகே விஷ்ணு மூர்த்தி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றார். எட்டுப்பட்டைகள் கொண்டு அமையப் பெற்ற மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் அன்னையின் திருவுருவம் மிகவும் அழகாக இருக்கின்றது. சலவைக்கல்லால் உருவாக்கி பிரதிஷ்டை செய்துள்ளனர். பின்பறமாக ஓம் எனப் பொறிக்கப்பட்டுள்ளது. அனைவரும் தொட்டு வணங்கலாம். சிந்தாமணி விநாயகர், சரவணன், சனீஸ்வர பகவான் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. நவராத்ரியில் செய்யப்படும் சண்டி ஹோமம், உத்தராயண ரேவதியில் வருஷாபிஷேகம் ஆகியன சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.