அருள்மிகு பேராத்து செல்வி அம்மன் திருக்கோவில் (பாளையங்கோட்டை)

God Name : -

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

ஒரு சமயம் தாமிரபரணி ஆற்றருகே சென்று கொண்டிருந்த அரசன், எலுமிச்சம் பழம் ஒன்று பூவில் சுற்றப்பட்டு மிதந்து வருவதைக் கண்டார். ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஆள் ஒருவனைப் பார்த்து மிதந்து வருவதை எடுத்து வரச் சொல்லிப் பணித்தார். அவன் ஒரு தொழுநோயாளி. ஆற்றுக்குள் அவன் இறங்கியதும் தண்ணீருக்குள் அவனது காலடியில் ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. அதை வெளியே எடுத்துப் பார்த்தான். அழகிய அம்மன் சிலை. அதிசயமாக அவனது தொழுநோயும் மறைந்தது. இந்த அதிசயத்தை நிகழ்த்திய அந்த அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பினார் அரசன் என ஸ்தல வரலாறு.
மூலஸ்தானத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் பேராத்து செல்வி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். வடக்கு நோக்கி அமர்ந்திருப்பது கூடுதல் விசேஷம். சுற்றுவட்டார கிராம மக்களுக்கு காவல் தெய்வமாகவும் குல தெய்வமாகவும் விளங்குகிறாள். வெளிச்சுற்றில் மகிஷாசூரனின் மனைவி, வேதாளம், தளவாய் மாடன், நல்ல மாடன், சங்கிலி பூதத்தார், கால பைரவர், கன்னி விநாயகர் ஆகிய கிராம தேவதைகளையும் சிவலிங்க வடிவத்தையும் தரிசிக்கலாம். அம்மன் சந்நிதிக்கு எதிரில் சற்றுத் தள்ளி காணப்படும் சந்நிதியில் சுடலை மாடன் கம்பீரமாக எழுந்தருளியுள்ளார். அருகே வில்வமும் வேம்பும் இணைந்த விருட்சமும் அதன் கீழே லிங்க வடிவமும் காணலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.