அருள்மிகு அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி திருக்கோவில் (பாளையங்கோட்டை)

God Name : மூலவர்: வேத நாராயணன்் உற்சவர்: ராஜகோபாலன்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

அசுரர்களுடன் போர் புரிந்து கொண்டிருந்த இந்திரன், அவர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அர்ஜுணனின் உதவியை நாடினான். அர்ஜுணன் அசுரர்களை தோற்கடித்து இந்திரனுக்கு உதவினான். அதற்குப் பரிசாக, தான் பூஜித்து வந்த கோபால சுவாமி விக்ரகத்தை அர்ஜுணனுக்குப் பரிசாக வழங்கினான் இந்திரன். அந்த விக்ரகத்தை பக்தி சிரத்தையுடன் வழிபட்டு வந்தான் அர்ஜுணன். கிருஷ்ண பகவான் கூறியபடி, கலியுக ஆரம்பத்தில் அந்த விக்ரகத்தை கங்கையில் போட்டு விட்டான் அர்ஜுணன். கிருஷ்ணரின் திருவுளப்படி, மணப்படை நாட்டு மன்னன் ஸ்ரீபல்கி என்பவன் அந்த விக்ரகத்தை எடுத்து தாமிரபரணி நதிக்கரையில் பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பினான் என ஸ்தல வரலாறு கூறுகிறது. பிரம்மாவிடமிருந்து மது-கைடப அரக்கர்கள் கவர்ந்து சென்ற நான்கு வேதங்களையும் மச்சாவதாரம் எடுத்து மீட்டார் விஷ்ணு மூர்த்தி. மீண்டும் வேதங்களை உபதேசித்தார். இதனால் வேதநாராயணன் எனும் திருநாமம் கொண்டார்.
மூலவர்: வேத நாராயணன்் உற்சவர்: ராஜகோபாலன். மூலஸ்தானத்தில், மூலவராக ஸ்ரீ வேத நாராயணப் பெருமாள் வீற்றிருந்த திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றார். ஸ்ரீ வேதவல்லி - ஸ்ரீ குமுதவல்லி தாயார்கள் உடன் உள்ளனர். உள்ளேயுள்ள மண்டபத்தில், உற்சவ மூர்த்திகளாக ஸ்ரீ ராஜகோபால சுவாமி, ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்களுடன் சகிதம் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். அர்த்த மண்டபத்தில், ஸ்ரீ ருக்மணி - ஸ்ரீ சத்யபாமா சகிதமாக ஸ்ரீ வேணுகோபாலசுவாமி எழுந்தருளியுள்ளார். அருகே சக்கரத்தாழ்வார் எழுந்தருளியுள்ளார். முதல் தளத்திலுள்ள தனி சந்நிதியில் ஸ்ரீ அழகிய மன்னார் திவ்ய தரிசனம் தருகின்றார். நாச்சியார்களும் முனிவர்களும் காணப்படுகின்றனர். முன் பிரகாரத்தில், பூமி தேவிக்கும் ஸ்ரீ தேவிக்கும் தனித்தனி சந்நிதிகள் இருக்கின்றன. இங்கு வீற்றிருக்கும் செண்பக விநாயகர் மிகுந்த வரப்பிரசாதி. ஸ்ரீ பரமபதநாதனையும் சேவிக்கலாம். வலச்சுற்றில் கோவில் கொண்ட ஸ்ரீ ஆதி வராஹர் அழகான திருமேனியுடன் காணப்படுகிறார். கூப்பிய கரங்களுடன் நாதனை பார்த்துக் கொண்டிருக்கும் லட்சுமியை மடியிலிருத்தி ஆலிங்கனம் செய்த கோலம். ஆஞ்சநேய மூர்த்தியின் திருவுருவம் அழகாக இருக்கின்றது. இக்கோவிலுக்கு தென்மேற்கில், அழகிய தெப்பக்குளத்துடன் கூடிய ராமசுவாமி கோவில் இருக்கின்றது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.