அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் (கோடகநல்லூர்)
God Name : ஸ்ரீ கைலாசநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
சிவதரிசனம் பெற்று முக்தியடைய விரும்பிய உரோமச முனிவரின் விருப்பத்தை பூர்த்தி செய்ய எண்ணிய அவரது குரு அகஸ்தியர், ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அந்த மலர்கள் எங்கெல்லாம் சென்று கரை ஒதுங்குகிறதோ, அங்கெல்லாம் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபடுமாறு பணித்தார். அவ்வாறே ஒன்பது இடங்களில் ஒன்பது லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் உரோமச முனிவர். இவையே நவ கயிலாயங்கள்.
இவற்றுள் மூன்றாவது மலர் சென்று கரை ஒதுங்கிய இடமே கோடகநல்லூர். நவகோள்கள் ஒவ்வொன்றும் நவ கயிலாயங்களில் ஆட்சி செலுத்துவதாக ஐதீகம். அதன்படி இத்தலத்தை அங்காரக ஸ்தலம் என்பார்கள்.
பரீட்சித்து மன்னனையும், நளனையும் தீண்டிய கார்க்கோடக பாம்புக்கு, மஹாவிஷ்ணு முக்தி அளித்த ஸ்தலம் என்பதால் இவ்வூரை கார்க்கோடக நல்லூர் என்று அழைத்தனர். பின்னர் மருவி கோடகநல்லூர் என்றானது. இன்றும் இங்கு கருநாக பாம்புகள் அதிகமிருப்பதாக கூறுகின்றனர். மனோன்மணியத்தில் வரும் சுந்தர முனிவர் அவதரித்த ஸ்தலம்.
ஸ்வாமிக்கு சிகப்பு வஸ்திரம் சாத்தி, துவரம் பருப்பு நைவேத்யம் செய்து பிரார்த்தித்துக் கொண்டால் செவ்வாய் தோஷத்திலிருந்து விடுபடலாம். செவ்வாய் தோஷம் கொண்ட பெண்கள் 58 விரலி மஞ்சள்களை தாலிக்கயிற்றில் கட்டி இங்குள்ள நந்தியின் கழுத்தில் கட்டி பிரார்த்தித்துக் கொண்டால் செவ்வாய் தோஷம் நீங்குவதாக ஐதீகம்.
கார்க்கோடகன் பூஜித்ததால் நாக தோஷ பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. கார்க்கோடக க்ஷேத்ரம் என்ற பெயரையும் கொண்டது.
கார்க்கோடகஸ்ய நாகஸ்ய தமயந்த்யா நளஸ்யச
ரிது பர்ணஸ்ய ராஜ ரிஷே: கீர்த்தனம் கலிநாசனம்
மூலவர்: ஸ்ரீ கைலாசநாதர், அம்பாள்: ஸ்ரீ சிவகாமி
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் கைலாசநாதர். செவ்வாய் பகவானின் வடிவமாக மூலவர் இருப்பதால் அங்காரக ஸ்தலமாக கருதப்படுகிறது. கிழக்கு பார்த்த சந்நிதி.
அம்பாள் சிவகாமி தெற்கு பார்த்த சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். ஐந்து தலை நாகத்தின் கீழ் நின்ற நிலையில் தரிசனம் தரும் அனந்த கௌரியை நாகாம்பிகை எனப் போற்றி வழிபடுகின்றனர்.
ஆதிசங்கரர் இவ்வூரை தட்சிண சிருங்கேரி எனக் கூறியுள்ளார். பொருநை ஆற்றை தட்சிண கங்கை என்பார்கள்.
நவ கயிலாயங்களில் ஒன்று - அங்காரக ஸ்தலம்
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.