அருள்மிகு லட்சுமி நாராயணர் மற்றும் காட்டு ராமர் திருக்கோவில் (திருநெல்வேலி)

God Name : ஸ்ரீ லட்சுமி நாராயணர்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

ஸ்தல வரலாறு: சீதா பிராட்டியை அபகரித்துச் செல்ல முயன்ற ராவணனுடன், ஜடாயு என்னும் கழுகரசன் யுத்தம் புரிந்தான். போரில் தனது இறக்கைகள் இரண்டையும் இழந்து உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தான். இந்த நிகழ்வை ராமபிரானிடம் தெரிவிக்கும் வரையிலாவது தனது உயிர் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தான். சீதையைக் காணாமல், கானகத்தில் தேடி அலைந்து கொண்டிருந்த ராமனின் காதுகளில் ராமநாம ஜபம் விழுந்தது. நடந்தவற்றை ராமனிடம் கூறிவிட்டு உயிர் நீத்த ஜடாயு, சாகும் தறுவாயில் தனக்கு லட்சுமிநாராயணனாகக் காட்சி தருமாறு வேண்டினான். ஜடாயுவிற்கு லட்சுமிநாராயணக் கோலத்தில் சேவை சாதித்த ஸ்ரீ காட்டு ராமர், பின்னர் ஜடாயுவிற்கு நீர்க்கடன் செய்ய ஜடாயு தீர்த்தத்தை உருவாக்கினார். தர்ப்பணம் செய்த இடம் ஜடாயுத் துறை என்று வழங்கப்படுகிறது. ஜடாயுவிற்கு காட்சி கொடுத்த இடம் லட்சுமிநாராயணர் கோவிலாக உள்ளது. நீர்க்கடன் முடித்து இளைப்பாறிய இடம் காட்டு ராமர் கோவிலாக உள்ளது. தர்ப்பணம் முடித்த பின் சிவபெருமானை வழிபட்ட இடத்தில் இராமலிங்க-பர்வதவர்த்தினி திருக்கோவில் உள்ளது. வில் அம்பு ஏதுமின்றி, சந்தான ராமராக பிண்டம் கொடுப்பது போல பூணூலுடன் காட்சி தருகிறார். ஜடாயுத் துறையில் அனைத்து தோஷங்களுக்கும் பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. ஜீவ நதியாக விளங்கும் தாமிரபரணியை தட்சிண கங்கை என்று கூறுவார்கள். இங்கு ஸ்நானம் செய்பவர்கள் ஓதும் சங்கல்ப ஸ்லோகம்: தாம்ரவர்ணியாம் மஹாநத்யாம் தக்ஷிண கங்காயாம் பூர்வ வாஹின்யாம் வேணுவனே, ஜடாயு ராமச்சந்த்ர தீர்த்தே சகல பாபக்ஷய நிவர்த்யர்த்தம், தாம்ரவர்ணி ஸ்நானம் அஹம் கரிஷ்யே
திருநெல்வேலிக்கு வடகிழக்கே அமைந்துள்ள நாரணமால்புரம் என்னும் கிராமம் புராண காலத்துடன் தொடர்புடையதும், ராமாயணத்துடன் பிணைக்கப்பட்டதும் என்று கூறுவார்கள். அதற்கு தென்கிழக்கே அரை கிலோமீட்டர் தூரத்தில் ராமேஸ்வரநல்லூர் என்று அழைக்கப்படும் அருகன்குளம் உள்ளது. இத்தலத்தில் ஜடாயுத் துறை உள்ளது. ஜடாயு தீர்த்தமும் உள்ளது. ராமர் பாதத்தில் ஜடாயு மோட்சம் பெற்ற ஸ்தலம் இது. மூலஸ்தானத்தில் ஸ்ரீ லட்சுமி நாராயணர் மூலவராக எழுந்தருளி சேவை சாதிக்கிறார். தனது இடது தொடையில் லட்சுமி தேவியை அமர்த்தியுள்ளார். காசி கங்கா தீர்த்தக் கிணறு அருகாமையில் உள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.