அருள்மிகு எட்டெழுத்துப் பெருமாள் திருக்கோவில் (மேல அருக்கன்குளம் - தருமபதி)

God Name : ஸ்ரீ எட்டெழுத்துப் பெருமாள், ஆதிசிவன் மற்றும் சிவசுப்ரமண்யர்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

இவ்வாலயத்தின் எட்டெழுத்து சிறப்புகள்: ஆதி சிவன், எட்டெழுத்துப் பெருமாள், சிவசுப்ரமண்யர், இளைய பெருமாள், பெரிய பிராட்டியார், ஆத்தியப்பர், தன விஷ்ணு விக்னேஸ்வரர், ஸ்ரீ ராம தூத பக்த வீர ஆஞ்சநேயர் ஆகிய எட்டு தெய்வங்கள் எழுந்தருளியுள்ளனர். ஸ்ரீ ராம தூத பக்த வீர ஆஞ்சநேயர் சந்நிதியின் கோபுரத்தில் அஷ்ட லட்சுமிகள் உள்ளனர். கோவிலின் வாசலில் இடதுபுறமாக மாயாண்டி சித்தரின் சமாதி இருக்கின்றது. எட்டு நிலைகளிலும் சிறப்பாக இருக்கும் எட்டெழுத்துப் பெருமாள் கோவிலில் தர்மத்தை வளர்ப்பதால் இத்தலத்திற்கு தருமபதி எனப் பெயர் வந்தது. காலையில் 4 மணிக்கெல்லாம் நடை திறக்கப்பட்டு, தன விஷ்ணு விக்னேஸ்வரரில் ஆரம்பித்து எட்டு தெய்வங்களுக்கும் அபிஷேகங்களை முடித்து 6 மணிக்கு முதல் பூஜை ஆரம்பமாகிறது. காலை 6 மணிக்கு அருள் வாக்கு நடைபெறும். பின்னர் வீர ஆஞ்சநேயருக்கும் மாயாண்டி சித்தருக்கும் அபிஷேக ஆராதனை செய்வார்கள். அடுத்து அவல் பிரசாத நைவேத்யம். அனைவருக்கும் படைத்து இரண்டாம் பூஜை நடக்கும். மாலை 6 மணிக்கு மூன்றாம் பூஜை. திருமணி எனும் திருமுத்திரை பக்தர்கள் நெற்றியில் இடப்படுகிறது.
மூலவர்கள்: எட்டெழுத்துப் பெருமாள், ஆதி சிவன், சிவசுப்ரமண்யர். மூலஸ்தானத்தில் ஸ்ரீ எட்டெழுத்துப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஆறடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. சந்தன மரத்தால் உருவானது. மூலவரின் முன்பாக அழகிய வெண்கல சிலையாக உற்சவ மூர்த்தி காணப்படுகிறார். தாயார் ஸ்ரீ பெரிய பிராட்டி வரப்பிரசாதியாக திகழ்கிறார். எட்டெழுத்துப் பெருமாளின் வலப்புறமாக ஆதிசிவன் லிங்க ஸ்வரூபமாக சதாசிவலிங்கமாக எழுந்தருளியுள்ளார். சிவனிடம் உத்தரவு பெற்ற பின்னரே பெருமாள் பூஜையைத் தொடங்கி அருள் கணக்கு உரைப்பதாக ஐதீகம். இடதுபுறமாக சிவசுப்ரமண்ய மூர்த்தியும் எழுந்தருளி தரிசனம் தருகின்றார். அர்த்த மண்டபத்தின் வலதுபுறமாக இளைய பெருமாள் லக்ஷ்மணனும், இடதுபுறமாக பெரிய பிராட்டி சீதா தேவியும் தரிசனம் தருகின்றனர். மஹா மண்டபத்தில் காவல் தெய்வமான ஆத்தியப்பர் காவலாக இருக்கின்றார். சங்கு - சக்கரதாரியாக தன விஷ்ணு விக்னேஸ்வரர் கோவில் முகப்பின் வலது பக்கத்திலும், இரு தேவியர்கள் உடனிருக்க முருகப் பெருமான் இடது பக்கத்திலும் காணப்படுகின்றனர். ஸ்ரீ ராம தூத பக்த வீர ஆஞ்சநேயர் மூலவரை வணங்கும் நிலையில் காணப்படுகிறார். அன்னபூரணி தேவி தரிசனம் தருகிறாள். 500 பசுக்களைக் கொண்ட கோசாலை உள்ளது. நடுவே கோபாலகிருஷ்ணர் கோவில் கொண்டுள்ளார்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.