அருள்மிகு ஸ்ரீ சஞ்சீவி வரத ஆஞ்சநேயர் திருக்கோவில், திருநெல்வேலி

God Name : ரோக ஹர விநாயகர் மற்றும் ஸ்ரீ சஞ்சீவி வரத ஆஞ்சநேயர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

சீதா தேவியை தேடி தென்திசை வந்த ஹனுமன், தாமிரபரணிக்கரையில் அமைந்துள்ள அழகிய சோலையைக் கண்டு மனதைப் பறிகொடுத்து இங்கே தங்கி சூரிய நமஸ்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சோலையையும் அருகேயுள்ள பகுதியையும் சேர்த்து கெட்வெல் ஆஸ்பிடல் நிறுவனம் வாங்கி, இங்கே ஆஸ்பத்திரி அமைத்ததாகக் கூறப்படுகிறது. வைகானஸ ஆகம முறைப்படி நித்ய ஆராதனைகள் செய்யப்படுகின்றன. அலங்கார சக்ரவர்த்தி எனப் பெயர் பெற்ற ராஜாமணி பட்டாச்சாரியாரும், அவரது குமாரர் ஸ்ரீநிவாச பட்டாச்சாரியாரும் அலங்காரங்களையும் ஆராதனைகளையும் கவனித்து வருகின்றனர்.
மூலஸ்தானத்தில் ரோக ஹர விநாயகரும், ஸ்ரீ சஞ்சீவி வரத ஆஞ்சநேயரும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். ஆதியான கணபதியும், அந்தமான ஆஞ்சநேயரும் ஒரு சேர காட்சி தருவது கூடுதல் விசேஷம். ஸ்ரீ சஞ்சீவி வரத ஆஞ்சநேயர் மேற்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். வரத ஹஸ்தமாக திகழும் வலக்கரத்தின் மத்தியில் மகாலட்சுமியின் திருவுருவம் காணப்படுகிறது. இடது கரத்தில் கதாயுதம் வைத்துள்ளார். பாதங்கள் தெற்கு நோக்கி திரும்பியுள்ளன. முழுமையான லாங்கூல (வால்) தரிசனம் கிடைக்கின்றது. அபிஷேகத்தில் சிவஸ்வரூபமாகவும், அலங்காரத்தில் விஷ்ணு ஸ்வரூபமாகவும் காட்சி தருகிறார். வலது கண் சூரியனாகவும், இடது கண் சந்திரனாகவும் உள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.