அருள்மிகு தனுஷ்கோடி கோதண்டராமர் திருக்கோவில் (குரோம்பேட்டை)
God Name : சதுர்புஜ கோதண்டராமர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
காஞ்சிபுரம்
Call : +91-
தனுஷ்கோடியில் ராவணனுடைய தூதர்களான சுகன், சாரணன் ஆகியோர்க்கு சேவை சாதித்த மூலவர் இங்கு எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். 1964 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலில், தனுஷ்கோடி கோயில் மணலால் மூடப்பட்டது. இந்தக் கோயிலில் இருந்த மூலவர் மற்றும் உற்சவர் விக்ரகங்களை ராமநாதபுரம், திருப்புல்லாணி ஆகிய இடங்களில் சிறிது காலம் வைத்திருந்து பின்னர் சென்னைக்கு கொண்டு வந்தனர். சிறிது காலம் பம்மலில் வைத்திருந்துவிட்டு, இங்கு பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பப்பட்டதாக வரலாறு. அஹோபில மடத்து ஜீயர் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகளால் மங்களாசாஸனம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. சேதுக்கரை செல்ல முடியாதவர்கள், இங்கு சர்ப்ப சாந்தி செய்து கொள்கின்றனர்.
மூலஸ்தானத்தில் சதுர்புஜ கோதண்டராமர் மூலவராக எழுந்தருளியுள்ளார். சீதா தேவி, லக்ஷ்மணன், ஹனுமன் ஆகியோர் உடன் எழுந்தருளியுள்ளனர். அழகான உற்சவ மூர்த்தங்கள் சேவை சாதிக்கின்றன. 200 பேர் கூடி வழிபட வசதியான மண்டபம் உள்ளது. தினமும் மாலை நேரங்களில் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்யப்படுகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.