அருள்மிகு குறுக்குத்துறை சுப்ரமண்ய ஸ்வாமி திருக்கோவில் (திருநெல்வேலி)
God Name : சுப்ரமண்யஸ்வாமி
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள சுப்ரமண்யஸ்வாமி அனுக்ரஹமூர்த்தியாக திகழ்கிறார். பேரெழில் கொண்ட திருமேனி. கருவறையும், மூலவரும், உட்பிரகாரத்தின் ஒரு பகுதியும் ஒரே பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டு உள்ளது. இது ஒரு குடைவரைக் கோவில். திருவுருவாமலை என்றும் கூறுவார்கள். திருவுருவங்களை வடிப்பதற்கேற்ற பாறைகளை கொண்டிருப்பதாலும், கோவில்களுக்கு வேண்டிய தெய்வீக உருவங்களை சிற்பிகள் இந்த பாறைகளிலிருந்து வடிப்பதாலும் இப்பெயர் கொண்டது. 1653ல் திருச்செந்தூர் முருகனின் மூல விக்ரஹம், இந்த பாறைகளிலிருந்து வடிவமைக்கப்பட்டது. அதனை செய்த சிற்பி இங்கு ஒரு முருகப் பெருமானை செதுக்கினார். அது ஆச்சிப்பாறை எனப் பெயர் கொண்டு, பின்னர் மக்கள் வழிபட ஆரம்பித்து நாளடைவில் கோவிலாக உருவானதாக ஸ்தல வரலாறு. சிந்துபூந்துறைக்கு குறுகிய வழி உண்டானதாலும், ஒரு சாரார் குறுக்கே புகுந்து நீராட வருவதாலும் குறுக்குத்துறை எனப் பெயர் கொண்டதாக கூறுவர். வெள்ளப்பெருக்கு சமயத்தில் இக்கோவிலுக்கு செல்ல முடியாதபடி மணல் மேடிட்டு விடும். அந்த நாட்களில் நித்ய பூஜைகள் தடைப்படும். இதை தவிர்க்க மேலைக் கோவில் கட்டப்பட்டது என்பர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.