அருள்மிகு சந்தி விநாயகர் திருக்கோவில் (திருநெல்வேலி)

God Name : சந்தி விநாயகர் எனப்படும் அகஸ்தியானுக்ரஹ மூர்த்தி

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

சிவபெருமானிடமிருந்து கங்கையைப் பெற்றுக்கொண்ட அகஸ்தியர், தென் திசை நோக்கி வந்தபோது, சந்தியாவந்தனம் செய்யும் வேளை வந்துவிட்டதால், எதிர்ப்பட்ட அந்தணச் சிறுவனிடம் கங்கை நீருள்ள கமண்டலத்தைக் கொடுத்துவிட்டு, ஆற்றங்கரைக்குச் சென்றார். கீழே இருந்த கமண்டலத்தை ஒரு காகம் கவிழ்க்க, கமண்டலத்து நீர் விரிந்து ஓடி, காவிரி ஆறாகப் பெருகி ஓடியது. காகம் கவிழ்த்து நீர் விரிந்து ஓடியதால் காவிரி எனப் பெயர்பெற்றதாகக் கூறுவர். விநாயகர் காக வடிவம் நீக்கி மீண்டும் சிறுவனாக எதிர்ப்பட்டார். அகஸ்தியர் சிறுவனைக் குட்ட முற்பட்டபோது, விநாயகர் சுயரூபம் காட்டி நின்றார். தமது செய்கைக்காக வருந்திய அகஸ்தியர் தம்மைத் தாமே குட்டிக்கொண்டார். அவரைப் பரிவுடன் பார்த்த விநாயகர், "வேண்டுவது என்ன?" என வினவினார். "இது போன்று தலையில் குட்டிக்கொள்ளும் பக்தர்களின் குறைகளைத் தீர்க்க வேண்டும்" என அகஸ்தியர் பிரார்த்தித்தார்.
மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியுள்ள சந்தி விநாயகர் மிகுந்த வரப்பிரசாதி. அழகான திருவுருவம். இவருக்கு அகஸ்தியானுக்ரஹ மூர்த்தி என்ற திருநாமமும் உண்டு. மாலை நேரங்களில் தெற்குத் தெரு நெடுகிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று கை கூப்பி வழிபடுகின்றனர். அகஸ்தியர் சந்தியாவந்தன அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு இவரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம். இதனால் சந்தி விநாயகர் எனப் பெயர் பெற்றிருக்கலாம் எனக் கூறுவர். கோவிலைச் சுற்றியுள்ள தேர் ஓடும் வீதிகளில், தெற்கு வீதியும் மேற்கு வீதியும் சந்திக்கும் இடத்தில் இக்கோவில் இருப்பதாலும் இப்பெயர் வந்திருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.