அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் (கீழப்பாவூர்)

God Name : ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மற்றும் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

நாரதர், காஷ்யபர், வருணன், சுகோஷன் ஆகிய நால்வரும், தாமிரபரணியின் கிளை நதியான சித்ரா நதிக்கரையில் தவம் மேற்கொண்டனர். இரண்ய சம்ஹாரம் நிகழ்த்த தோன்றிய உக்ரநரசிம்ம மூர்த்தியை அதே கோலத்தில் காண வேண்டியே தவம் செய்யலாயினர். அவர்களது தவத்தினால் மகிழ்ந்த சுவாமி, அவர்கள் வேண்டியபடியே, வேண்டிய கோலத்தில் சேவை சாதித்தார் என ஸ்தல வரலாறு. பாண்டிய நாட்டு அஹோபிலம் என்பார்கள்.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் பதினாறு திருக்கரங்களுடனும், உக்ர வடிவம் கொண்டும், இரணியனை சம்ஹாரம் செய்யும் நிலையில் காட்சி தருகின்றார். இடது மடியில் இரணியனை தாங்கிப் பிடித்தும், நான்கு கைகளால் அவனது வயிற்றைக் கிழித்தபடியும், இரண்டு கைகளால் குடலை உருவியவாறும், மற்ற கைகளில் ஆயுதங்களுடனும் ஆவேசமாக காணப்படுகிறார். மேற்கு நோக்கி வீற்றிருந்த கோலம். பால் மற்றும் இளநீர் திருமஞ்சனம் விசேஷம். பானக நைவேத்யம் விசேஷம். நாரதர், காஷ்யபர், வருணன், சுகோஷன் ஆகிய நால்வரும் நரசிம்மரை வணங்கிய நிலையில் காணப்படுகின்றனர். பிரகலாதன் அருகே காணப்படுகிறான். கிழக்கு பார்த்த சந்நிதியில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ அலர்மேல்மங்கை மற்றும் ஸ்ரீ பத்மாவதி தாயார்கள் உடன் உள்ளனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.