அருள்மிகு மத்யஸ்தநாதர் திருக்கோவில் (தாருகாபுரம்)

God Name : மத்யஸ்தநாதர்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

ஒரு சமயம் சேர - சோழ - பாண்டிய மன்னர்களுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பை போக்க தாருக மகரிஷி வடிவம் கொண்டு இறைவனே நேரில் வந்து அவர்களுக்கு பாகம் பிரித்துக் கொடுத்தார். இதனால் இறைவனை மத்யஸ்தநாதர் எனப் போற்றுகின்றனர்.
மூலவர்: மத்யஸ்தநாதர், அம்பாள்: அகிலாண்டேஸ்வரி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மத்யஸ்தநாதர். ஐந்து தலை கொண்ட ஐம்பொன் நாகாபரணம் குடை பிடிக்க கம்பீரமாக தரிசனம் தருகின்றார். இவருக்கு பிணக்கு அறுத்த நாதர் என்ற பெயரும் உண்டு. அன்னை அகிலாண்டேஸ்வரி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். கோஷ்ட மூர்த்தங்கள் அழகாக இருக்கின்றன. நடராஜர் சபையில் சிவகாமி உடனாய நடராஜப் பெருமான் எழுந்தருளியுள்ளார். காரைக்கால் அம்மையார் உடன் உள்ளார். நந்தீஸ்வரரின் மண்டபத்து கூரையில் உள்ள மூலிகை ஓவியங்களில் விஷ்ணுவும் ராசி சக்கரமும் அழகாக உள்ளன. அதிகார நந்தி, சூரிய - சந்திரர்கள், விஷ்ணு துர்க்கை, கன்னி மூல கணபதி, பாலசுப்ரமணி, சத்ரு சம்ஹார பைரவர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். நவகிரக பீட தட்சிணாமூர்த்தி விசேஷ மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். அறுபத்திமூவர்கள், வள்ளி - தெய்வயானை உடனாய முருகப் பெருமான், விசாலாட்சி சஹித விஸ்வநாதர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். பஞ்சபூத ஸ்தலங்களுள் - நீர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.