அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் (வாசுதேவநல்லூர்)

God Name : சிந்தாமணிநாதர்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

சிந்தகம் அல்லது சிந்தம் என்றால் புளி (புளியமரம்) எனப் பொருள். இத்தலத்திலுள்ள புளிய மரத்தடியில் சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து வழிபட்டான் இந்திரன். இதனால் இவ்விறைவன் சிந்தாமணிநாதர் எனும் பெயரைக் கொண்டார். தனது பெயரால் இவ்வூர் அமைய வேண்டும் என இந்திரன் விருப்பம் கொண்டதால் வாசவனூர் என்றழைக்கப்பட்டது. வாசவன் என்பது இந்திரனின் மறு பெயர். குலசேகர பாண்டியன் கொண்ட பெருநோயைக் குணப்படுத்திய தேவன் வாசுதேவன் என்றானான். வாசுதேவன் குடிகொண்ட நல்லூர் என்பதனால் வாசுதேவநல்லூர் எனப் பெயர் கொண்டது. குலசேகரனின் நோயைக் குணப்படுத்திய புண்ணிய தீர்த்தக் குளம் கும்ப புஷ்கரிணி என்ற பெயரில் கோவிலுக்கு முன்புறம் உள்ளது.
மூலவர்: சிந்தாமணிநாதர், அம்பாள்: இடபாகவல்லி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான அர்த்தநாரீஸ்வரர். சுயம்பு லிங்க வடிவம். ஐந்தடி உயரம் கொண்ட அழகான திருமேனி. சிரசில் கங்கையும் சந்திரனும் இடம் பெற்றுள்ளனர். சூலமும் கபாலமும் ஏந்திய கரங்கள் கொண்டு காட்சி தருகிறார். சிந்தாமணிநாதர் என்ற திருநாமமும் உண்டு. கரங்களில் பாசம், அங்குசம், பூச்செண்டு ஆகியன கொண்டும், காலில் கொலுசு அணிந்தும் காட்சி தருகிறாள். காதைத் தோடு அலங்கரிக்கிறது. ஜடை சிரசை அலங்கரிக்கிறது. ஸ்வாமி பாகத்திற்கு வேஷ்டியும், அம்பாள் பாகத்திற்கு புடவையும் அணிவித்துள்ளனர். நுழைவாசலுக்கு நேராக உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் தென்திசை நோக்கியபடி நடராஜப் பெருமானும் அன்னை சிவகாமியும் எழுந்தருளியுள்ளனர். உள் மண்டபத்திலுள்ள ஒரு மஞ்சத்தில் அர்த்தநாரீஸ்வரரின் உலாத் திருமேனி உள்ளது. அருகேயுள்ள மேடையில் சோமாஸ்கந்தர், அர்த்தபாகவல்லி, விநாயகர், சந்திரசேகரர், ப்ருங்கி மகரிஷி ஆகியோரின் உலாத் திருமேனிகளைக் காணலாம். போர்க்கோலம் பூண்டு தேரில் பவனி வரும் கணேசானி அல்லது கணேசாயினி திருவுருவம் அற்புதமாக இருக்கின்றது. யானை முகம், இடுப்பு வரை பெண் வடிவம், இடுப்புக்கு கீழே யாளி உருவம், ஒரு கையில் வாள், மற்றொரு கையில் கோடரி கொண்டு துரத்தி ஓடி வரும் பாவனையில் காணப்படுகிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.