அருள்மிகு சதாசிவ மூர்த்தி திருக்கோவில் (புளியறை)

God Name : சதாசிவ மூர்த்தி

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

தில்லை வாழ் சிவபக்தர்கள் சமணர்களுக்குப் பயந்து, அங்கிருந்த நடராஜப் பெருமானின் சிலையை எடுத்துக்கொண்டு, கால்நடையாகவே பல ஊர்களுக்குச் சென்றனர். கடைசியாக இவ்வூருக்கு வந்தபோது, இங்குள்ள புளிய மரப் பொந்தில் சிலையை ஒளித்து வைத்துவிட்டு, அதைச் செடிகொடிகளால் மூடிச் சென்றனர். புளியமரத்தின் சொந்தக்காரர், மரப்பொந்தில் ஸ்வாமி சிலை இருந்தது கண்டு, தினமும் ரகசியமாக வந்து வழிபடலானார். சிறிது காலம் கடந்ததும், தில்லை வாழ் சிவபக்தர்கள் சிலையைத் திரும்ப எடுத்துச் செல்ல இவ்வூருக்கு வந்தனர். சிலையை வைத்த இடம் மறந்து போனதால் தேடலானார்கள். சிலை திரும்பக் கிடைக்க அருளுமாறு இறைவனை வேண்டினர். சாரை சாரையாகப் போகும் எறும்புகளைப் பின்பற்றித் தொடர்ந்து செல்லுமாறு அசரீரி கேட்டது. அவ்வாறே சென்று சிலையைத் திரும்ப எடுத்துக்கொண்டார்கள். மரத்தின் சொந்தக்காரர் வந்து பார்த்து, நடராஜர் சிலை இல்லாதது கண்டு வருத்தமுற்றார். அந்த பக்தரைத் திருப்திப்படுத்த, மரப்பொந்து பிளந்து அதிலிருந்து சிவலிங்கம் வெளிப்பட்டது. அந்த லிங்கத்தை ஸ்தாபித்து இவ்வாலயம் கட்டியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
மூலஸ்தானத்தில் சதாசிவ மூர்த்தி சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார். இவர் சுயம்பு வடிவம். அன்னை சிவகாமி அழகே உருவாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். விசேஷ மூர்த்தியாக தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார். இவரது பாதத்தில் ஒன்பது ஆவர்த்தவீயம் கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ளன. இக்கோவில் தட்சிணாமூர்த்தி கோவில் என்றே பிரபலம். ஒரே தீபாராதனையில் நந்தீஸ்வரர், ஸ்வாமி (சதாசிவ மூர்த்தி), தட்சிணாமூர்த்தி ஆகிய மூன்று தெய்வங்களையும் தரிசிக்கும் விதத்தில் சந்நிதிகளை அமைத்துள்ளனர். சிவனுக்கு பின்புறமாக நவநீதகோபாலர் எழுந்தருளியுள்ளார். சுற்றுப் பிரகாரத்தில் சதாசிவர், சுப்ரமண்யர், பைரவர், நாகர், சந்திரன் ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம். ஜடாமகுட தீர்த்தமும் அதன் எதிரே இருபத்தியேழு நட்சத்திரங்களைக் குறிக்கும் இருபத்தியேழு படிக்கட்டுகளும் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலை அரண் போலிருக்க, அடர்ந்த மரங்களும், சோலைகளும், பச்சைப் பசேலென்ற வயல்களும், குற்றால அருவியின் சாரலும் கொண்டுள்ள சிறிய கிராமம் இது. இக்கிராமத்தை 'சிறிய சிருங்கேரி' என்று அழைக்கின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.