அருள்மிகு திருமலை குமாரசுவாமி திருக்கோவில் (திருமலை)

God Name : திருமலையாண்டவர் எனப்படும் குமாரசுவாமி, முத்தையன் எனப் போற்றப்படும் ஷண்முகர்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

நெடுவேள் குன்றம் என்று கண்ணகியால் போற்றி வணங்கப்பட்ட ஸ்தலம். காகபுஜண்டர் வழிபட்ட ஸ்தலம். விசாக நட்சத்திரத்தைக் கொண்டவர்கள் வழிபட வேண்டிய ஸ்தலம். தேவார வைப்புத்தலம்.
ஓம் எனும் வடிவத்தில் அமைந்துள்ள திருமலையின் உயரம் 400 அடி, சுற்றளவு 2.5 கி.மீ. 544 படிகள் ஏறி மேலே போக வேண்டும். மலையடிவாரத்தில் கோவில் கொண்டுள்ள வல்லப கணபதியை வணங்கி ஆசி பெற்று, படிகளேறி மேலே செல்கின்றனர். நாகீஸ்வரர் கோவில் ஒன்றும் காணலாம். படிகட்டுப் பாதையின் இடையில் இடும்பன் சந்நிதியும், நந்தகோபாலர் மண்டபமும், நடு வட்டப் பிள்ளையார் சந்நிதியும் இருக்கின்றன. மேலே சென்றதும் உச்சிப் பிள்ளையார் கோவிலில் அனுக்ஞை விநாயகரை தரிசிக்கலாம். அருகே திருக்குவளை சுனை மற்றும் சப்த கன்னியர்களைக் காணலாம். மூலஸ்தானத்தில் மூலவராக திருமலையாண்டவர் எனப்படும் குமாரசுவாமி எழுந்தருளி அருள் புரிகின்றார். தோளில் சாத்தப்பட்ட வேலும், மயில் வாகனமும் கொண்டு பேரெழில் கொண்ட திருவுருவமாக தரிசனம் தருகின்றார். நாலரை அடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. கிழக்கு பார்த்த சந்நிதி. உற்சவ மூர்த்தமான முத்தையன் எனப் போற்றப்படும் ஷண்முகரின் திருவுருவம் அழகாக இருக்கின்றது. முருகனுக்கு இடதுபுறம் கால பைரவர் காட்சி தருகின்றார். ஐந்தரை அடி உயர கம்பீரமான தோற்றம். வெளிப் பிரகாரத்தில் தில்லைக் காளியை தரிசிக்கலாம். கோவிலுக்கு வெளியே உள்ள ஸ்தல விருட்சமான புளிய மரத்தடியில் வேலும் மயிலும் கொண்ட அழகிய கற்சிலையைக் காணலாம். அதில் "உத்தண்ட வேலாயுதம் ஆதிமூல நிலையம்" எனப் பொறிக்கப்பட்டுள்ளது. ஷண்முக விலாசம் எனப்படும் வசந்த மண்டபத்தில் வசந்த விழா நடைபெறும். விபூதிப் பிரசாதம் பன்னீர் இலையில் தருகிறார்கள்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.