அருள்மிகு ஸ்ரீ ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் திருக்கோவில் (கிருஷ்ணாபுரம்)
God Name : ஸ்ரீ ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
மயன் எனும் மாயாவி இத்தலத்தில் ஒரு நகரத்தையும் சோலைகளையும் உருவாக்கி, இங்கே தங்கி, நீண்ட தவம் மேற்கொண்டு பிரம்மனிடம் பல வரங்களைப் பெற்றான். ஹேமை எனும் தேவலோகப் பெண்ணைக் கவர்ந்து வந்து இங்குள்ள ஒரு குகையில் அடைத்து வைத்திருந்தான். அவள் பாடும் தேவகானத்தைக் கேட்ட இந்திரன், நாரதர் மூலமாக அவள் சிறைப்பட்டிருப்பதை அறிந்து மயனைக் கொன்றான். இதனால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. சிவபெருமானின் அனுக்ரஹத்தால் இந்தக் குகைக்கு வந்த கங்கையுடன், அகஸ்தியர் அனுப்பிய காவிரியும் சேர்ந்து புண்ணிய தீர்த்தங்களாயின. அதில் ஸ்நானம் செய்து இந்திரன் தனக்கு வந்த பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக்கொண்டான். அந்தப் புண்ணிய தீர்த்தங்களைப் பாதுகாத்து வர சுயம்பிரபை எனும் தேவமங்கையை நியமித்து, ராம காரியமாக வரும் ஹனுமனிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு மீண்டும் தேவலோகம் வருமாறு பிரம்மன் கூறினார். சீதையைத் தேடிக்கொண்டு தென்திசை வந்த ஹனுமனும் வானர வீரர்களும் சோர்வுற்று தண்ணீர் தேடி இந்தக் குகையை நாடி வந்தார்கள். அவர்களுக்கு உணவும் தண்ணீரும் தந்து உபசரித்த சுயம்பிரபை, நடந்தவற்றைக் கூறி, ஹனுமனைப் பொறுப்பேற்குமாறு வேண்டினாள். சீதையைக் கண்டுபிடித்து ராமனிடம் சேர்த்துவிட்டு வருவதாகக் கூறிச் சென்றார் ஹனுமன். ராவண வதம் முடித்து சீதையுடன் அயோத்தி சென்ற ராமருடன் சென்ற ஹனுமன், ராமரின் பட்டாபிஷேகம் முடிந்ததும் இங்கே வந்து தங்கினார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. ராமர் - சீதை - லக்ஷ்மணர் இல்லாமல் அரை க்ஷணம் கூட இருக்க மாட்டேன் என்று ஹனுமன் பிடிவாதம் செய்ததால், லக்ஷ்மணர், சீதை உடன் ராமரும் இங்கு எழுந்தருளியதாக ஸ்தல வரலாறு மேலும் கூறுகிறது. பல அதிசயங்களை நிகழ்த்திக் காட்டி இங்கு எழுந்தருளியிருக்கும் ஆஞ்சநேயர் மிகுந்த வரப்பிரசாதியாகத் திகழ்கிறார். சுயம்பிரபை பாதுகாத்த குகையும் புண்ணிய தீர்த்தக்குளமும் இன்றும் உள்ளன.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார். ஆறு அடி உயர அழகிய திருமேனியுடன், கம்பீரமாக நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. மேற்கே ஸ்ரீ ராமர், லக்ஷ்மணர், சீதா தேவி ஆகியோர் சிறிய விக்ரக வடிவில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றனர். வன்னி மரத்தடியில் விநாயகரையும், மூங்கில் மரத்தடியில் ஆஞ்சநேயரின் திருவுருவப் படங்களையும் தரிசிக்கலாம். மூங்கில் மரத்தில் பக்தர்கள் பிரார்த்தனை சீட்டுகளைக் கட்டுகின்றனர். பைரவரையும் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.