அருள்மிகு நீலமணிநாதப் பெருமாள் கோவில் (கடையநல்லூர்)

God Name : ஸ்ரீ நீலமணிநாதர் என்கிற கரிய மாணிக்கப் பெருமாள்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

இத்தலத்திலுள்ள சிம்ம சுதர்ஸனருக்கு சுதர்ஸன ஹோமம் செய்கின்றனர். புத்திர பாக்யம் வேண்டி பிரார்த்தனை செய்பவர்கள், கருவேப்பிலை சாத நைவேத்தியம் செய்கின்றனர். திருவோண நட்சத்திர நாளில் பாயாஸ நைவேத்தியம் செய்கின்றனர். குருக்ஷேத்ர போரில் பலரையும் கொன்ற தோஷங்கள் நீங்க, இத்தலம் வந்த அர்ச்சுணன் இங்கு தாமிரபரணியில் நீராடி, மருத மரத்தடியில் சுயம்புவாக எழுந்தருளியிருந்த ஸ்வாமியை வழிபட்டு தோஷங்கள் நீங்கப் பெற்றதாக ஸ்தல வரலாறு.
மூலஸ்தானத்தில் மூலவரான ஸ்ரீ நீலமணிநாதர் என்கிற கரிய மாணிக்கப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். இவரது திருவுருவத்திற்கு முன்பாக ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் யந்திர பிரதிஷ்டை செய்து பூஜிக்கின்றனர். பூமி தேவி - நீளா தேவி தேவியர்கள் உடன் உள்ளனர். ஸ்ரீ சுதர்ஸன சக்கரத்தாழ்வார் தனி சந்நிதி கொண்டுள்ளார். 16 திருக்கரங்களுடன் காட்சி தரும் அழகிய திருமேனி. இவரது பீடத்தின் கீழ் இரண்டு சிங்கங்கள் இவரையும் இவருக்கு பின்னாலுள்ள யோக நரசிம்மரையும் தாங்கி நிற்கின்றன. நரசிம்மர் திருவடிகளின் கீழே ஐந்த தலை நாகம் ஒன்று காணப்படுவது வித்தியாசமாக உள்ளது. மூலஸ்தான விமானத்தில் தட்சிணாமூர்த்தி வித்தியாசமான கோலத்தில் காணப்படுவது அபூர்வம். முன் மண்டபத்தில் இரட்டை ஆஞ்சநேயர்களை சேவிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.