அருள்மிகு குமரன் திருக்கோவில் (இலஞ்சி)
God Name : இலஞ்சி குமரன் மற்றும் இருவாலுக நாயகர்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
காசிபர், கபிலர், துர்வாசர் ஆகிய மூன்று முனிவர்களும் கூடி தத்துவத்தின் நுணுக்கங்களைப் பற்றி விவாதித்தனர். மூவருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உடன்பாடு கிட்டாமல் போயிற்று. இத்தலத்திற்கு வந்து மூவரும் முருகப் பெருமானை வழிபட்டு தங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டினர். மூவருக்கும் காட்சியளித்த முருகன் தன்னுடைய வேல் ஞானசக்தியாகவும், வள்ளி இச்சா சக்தியாகவும், தெய்வயானை கிரியா சக்தியாகவும் செயல்பட்டு மூவினைகளை செய்வதாக உபதேசித்தார். தங்களுக்கு காட்சி தந்த கோலத்திலேயே இத்தலத்தில் முருகன் எழுந்தருளி பக்தர்களுக்கும் காட்சி தர வேண்டும் என மூவரும் வேண்டியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. சித்ரா நதிக்கரையின் மணலைக் கொண்டு அகஸ்தியர் உருவாக்கிய லிங்கமே இருவாலுக நாதர். முதல் நாள் மாலை வேளையிலும், அடுத்த நாள் காலை வேளையிலுமாக இரண்டு லிங்கங்களை மணலால் உருவாக்கினார் அகஸ்தியர். பின்னர் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்தார். இதனால் இறைவனுக்கு இருவாலுகநாதர் எனும் திருநாமம். மணலால் உருவான லிங்கம் என்பதால் அபிஷேகம் செய்வதில்லை. ஷெண்பக மலர்களால் அர்ச்சிப்பது விசேஷம். குற்றாலநாதரை தரிசிக்க வந்த அகஸ்தியர் இலஞ்சி குமரனின் வழிகாட்டலின் பேரில் அந்தக் கோவிலுக்குள் சென்று தமது வழிபாட்டு முறைகளைக் கையாண்டார் எனக் கூறப்படுகிறது. அழகான நீர்நிலைகளைக் கொண்டுள்ள பகுதி என்பதால் இலஞ்சி எனப்படுவதாகவும், ஸ்தல விருட்சமாக மகிழ மரத்தைக் கொண்டதால் இலஞ்சி எனப்படுவதாகவும் கூறுகின்றனர்.
மூலஸ்தானத்தில் இலஞ்சி குமரன் எழுந்தருளி அருள் புரிகின்றார். கையில் வேலேந்தி காட்சி தருகின்றார். வள்ளி - தெய்வயானை தேவியர்கள் உடன் உள்ளனர். சந்நிதிக்கு முன்பாக மயில் வாகனம் இருக்கின்றது. வடக்கிலுள்ள சந்நிதியில் இருவாலுக நாயகர் சிவலிங்க வடிவமாக எழுந்தருளியுள்ளார். குழல்வாய் மொழியம்மை உடன் எழுந்தருளி அருள் புரிகின்றார். கன்னி விநாயகர், ஷெண்பக விநாயகர், சந்திரசேகரர், தட்சிணாமூர்த்தி, பைரவர், சூரியன், சப்த மாதர்கள், காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி, சனீஸ்வரர், வேணுகோபாலர், ஜ்வரஹரேஸ்வரர், குற்றாலநாதர், ஷண்முகர், அய்யனார் மற்றும் அகஸ்தியர் ஆகியோரின் திருவுருவங்களை தரிசிக்கலாம். உற்சவ படிமங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.