அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோவில் (திருக்குற்றாலம்)

God Name : மூலவர்: திருக்குற்றாலநாதர் எனப்படும் குறும்பலா ஈசர்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

பார்வதி - பரமேஸ்வரர் திருக்கல்யாணம் காணுவதற்கு அனைத்து தேவர்களும் இமயமலைக்கு சென்றபடியால் வடபுறம் உயர்ந்தும், தென்புறம் தாழ்ந்தும் காணப்படவே, சமன் செய்வதற்காக தென்திசை திரிகூட மலைக்கு அகஸ்தியரை செல்லுமாறு பணித்தார் இறைவன். சிவபெருமானின் திருமணக் கோலம் காண ஆசைப்பட்ட அகஸ்தியர் தமக்கு அருளும்படி வேண்டினார். இத்தலத்தில் விஷ்ணுமூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் தம்மை சிவலிங்கமாக்கி ஆகம முறையில் பூஜித்தால், திருமணக் கோலம் காணலாம் எனப் பணித்தார் இறைவன். வைணவ ஆலயமாக இருந்ததினால், சைவ சின்னங்களுடன் இருந்த அகஸ்தியரை உள்ளே போக விடவில்லை. இலஞ்சிக் குமரனை வழிபட்டு, அவர் காட்டிய வழியில் திருமேனி முழுதும் திருமண் இட்டுக் கொண்டு வைணவக் கோலம் பூண்டு கோவிலுக்குள் சென்ற அகஸ்தியர், ஆத்மார்த்த பூஜையை தனிமையில் செய்யவிருப்பதாக கூறி கதவை சாத்திக் கொண்டு, மூல மூர்த்தியை 'குறுகு குறுகு' எனக் கூறி கையால் அழுத்தி சிவலிங்கமாக்கினார் என ஸ்தல வரலாறு. சிவலிங்கத்தின் தலை மீது பட்ட ஐந்து விரல்களின் அடையாளங்கள் ஊன்றி இருக்கின்றன. ஆத்தி மரத்தடியில் எழுந்தருளியதால் குறும்பலாநாதர் எனப் பெயர் கொண்டார். இதனால் இறைவனுக்கு தலைவலி ஏற்பட்டது. தலைவலியைப் போக்க 48 வகை நறுமண மூலிகைகளால் தைலம் தயாரித்து ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்கின்றனர். இத்தலத்திற்கு வருகை புரிந்த ஞானசம்பந்தப் பெருமான், வழி நெடுக சிவலிங்கங்களாக இருப்பதைக் கண்டு, தமது கால் படலாகாது என, அம்பாசமுத்திரம் பாதை பிரியுமிடத்திலிருந்தே குற்றாலநாதனை பாடிவிட்டு சென்றார் என்பர். தேவாரத்திருத்தலம் - பஞ்ச சபைகளுள் ஒன்று (சித்திர சபை) - சக்தி பீடங்களுள் ஒன்று (தரணி பீடம்)
மூலவர்: திருக்குற்றால நாதர் எனப்படும் குறும்பலா ஈசர். அம்பாள்: குழல்வாய் மொழியம்மை எனப்படும் வேணுவாக்குவாஹினி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான திருக்குற்றால நாதர். திருமேனியில் விரல்கள் பதிந்த அடையாளம் காணப்படுகிறது. இவருக்கு சாலிவாடீச்வரர், குறும்பலா, திரிகூடாசலபதி ஆகிய திருநாமங்களும் உண்டு. அம்பாள் குழல்வாய் மொழியம்மை வலப்பக்கத்திலும், அன்னை பராசக்தி இடப்புறத்திலும் கோவில் கொண்டு காட்சி தருகின்றனர். நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தரும் குழல்வாய்மொழியம்மை எனப்படும் வேணுவாக்குவாஹினி அழகே உருவாக காட்சி தருகிறாள். அம்பாள் சந்நிதிக்கு தென்புறமாக காணப்படும் ஸ்தல விருட்சம் குறும்பலாமரம். குறும்பலா மரத்தடியில் குறும்பலா நாதரை தரிசிக்கலாம். நான்கு வேதங்களும் இத்தலத்தில் தவம் செய்து இவ்விறைவனை வேண்டி பலாமரமாக நிற்பதாக கூறப்படுகிறது. கோவிலின் வடபுறத்தில் பராசக்தி பீடமாக எழுந்தருளியுள்ளார். அம்பாள் இங்கு யோகத்தில் இருப்பதாக ஐதீகம். இதை தரணிபீடம் - பராசக்தி பீடம் என்பார்கள். மஹாமேரு தரிசனம் புண்யம் தரும். பிரகாரத்தின் ஓரிடத்தில் பஞ்ச தரிசனம் கிடைக்கின்றது. அதாவது விநாயகர், லிங்கம், கோபுரம், மலை மற்றும் மலை வீழருவி. மலையடிவாரத்தில் அருவியின் அருகே அமையப் பெற்ற கோவில். நான்கு வேதங்களும் நான்கு வாசல்களாக இருக்கின்றன. கோவில் சங்கு வடிவில் அமைந்துள்ளது. குற்றாலநாதர் கோவிலின் நடுவிலும், வலப்புறமுள்ள குழல்வாய்மொழியம்மை சந்நிதியும், இடப்புறமாக உள்ள பராசக்தி சந்நிதியும் இவை மூன்றுக்கும் பொதுவாக சங்க வீதியும் அமையப் பெற்ற ஸ்தலம். சித்திரசபை கோவிலுக்கு வடக்கே சற்று தூரத்தில், ஐந்தருவி போகும் பாதையில் சித்திரசபை இருக்கிறது. சிவபெருமான் திருநடனம் ஆடிய ஐந்து சபைகளுள் இதுவும் ஒன்று. செப்புத் தகடுகளால் போத்தப்பட்ட சபை. இங்கே இறைவன் ஆடுவது திரிபுர தாண்டவம் என்பர். இங்கே நடராஜரும், சிவகாமியும் ஓவிய வடிவில் காட்சி தருகின்றனர். இதனால் இதனை சித்திரசபை என்று அழைக்கின்றனர். சக்கரம், ஸ்படிக லிங்கம், யந்திரம் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. நடனத்தை நேரில் கண்ட பிரம்மா அதை ஓவியமாக எழுதி வைத்தார் என ஸ்தல வரலாறு. உட்பிரகாரத்தில் கும்பமுனி, சப்த மாதர்கள், ஜீர தேவர், அய்யனார், பிரம்மா, சூரிய - சந்திரர்கள், நரசிம்மர், கன்னி விநாயகர், வன்மீகநாதர், ஜம்புகேஸ்வரர், அண்ணாமலை, காளத்திநாதர், திருமூலநாதர், ராமலிங்கம், சனீஸ்வரர், சண்டேசுவரர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். பிரகார சுற்றில் சஹஸ்ர லிங்கம், மஹாலிங்கம், உலகம்மையுடன் பாபவிநாசர், கோமதி உடனுறை சங்கரலிங்கர், காந்திமதி உடனாய நெல்லையப்பர், மணக்கோலநாதர், நாறும்பூநாதர், பால்வண்ண நாதர், மதுநாதேஸ்வரர், விசாலாட்சி உடனாய காசி விஸ்வநாதர், மீனாட்சி உடனாய சொக்கலிங்கம், அறம் வளர்த்தம்மா, அகஸ்தியர், வாசுகி, சோமலிங்கம், சஹஸ்ரலிங்கம் என அநேக மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.