அருள்மிகு ஜமதக்னீஸ்வரர் திருக் கோவில் (கிளாங்காடு)

God Name : ஜமதக்னீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

இத்தலத்தில் உள்ள ஜமதக்னி முனிவரின் பர்ணசாலைக்கு கார்த்தவீர்யார்ச்சுணன் எனும் மன்னன் வருகை தந்தான். மன்னனுக்கும் அவனது எண்ணற்ற படை வீரர்களுக்கும் விருந்துபடைத்தார் முனிவர். இவ்வளவு பேருக்கும் விருந்தளிக்க ஒரு முனிவரால் எப்படி சாத்தியமானது என்று மன்னன் கேட்க, தன்னிடமுள்ள காமதேனு பசுவின் உதவியினால் சாத்தியமாயிற்று என முனிவர் பதிலளித்தார். அந்த காமதேனு பசுவை தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரினான் மன்னன். தர மறுத்தார் முனிவர். முனிவர் தியானத்தில் இருக்கும்போது அவரை சிரச்சேதம் செய்தான் மன்னன் கார்த்தவீர்யார்ச்சுணன். அவரது மனைவி ரேணுகா தேவியை 21 முறை கத்தியால் குத்தினான். நடந்த விபரங்களை தனது மகன் பரசுராமனிடம் கூறிவிட்டு உயிர் நீத்தாள் தாய். இறந்த பதினாறாம் நாள் காளியாக அவதாரம் கொண்ட ரேணுகா தேவி, மகனிடம் கோடாலியை ஆயுதமாக தந்துவிட்டு மறைந்தாள். 21 தலைமுறைக்கு க்ஷத்ரிய வம்சத்தை அழித்த பின் பரசுராமன் தனது தந்தை வழிபட்ட சிவலிங்கத்தை ஸ்தாபித்து கோவில் எழுப்பினான் என்று ஸ்தல வரலாறு. காலப்போக்கில் அழிந்து மறைந்த இவ்வாலயத்தை பராக்ரம பாண்டியன் மீண்டும் புதுப்பித்து கட்டியதாக வரலாறு மேலும் கூறுகிறது. களா மரங்கள் அடர்ந்திருந்த பகுதியாக இருந்ததால் களாக்காடு எனப் பெயருற்று, நாளடைவில் மருவி கிளாங்காடு என்றானதாம்.
மூலவர்: ஜமதக்னீஸ்வரர், அம்பாள்: நல்ல மங்கை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஜமதக்னீஸ்வரர். சுயம்பு லிங்கம். ஜமதக்னி முனிவர் பூஜித்த லிங்கம் என்பதால் ஜமதக்னீஸ்வரர் என்ற பெயரைக் கொண்டார். கிழக்கு பார்த்த சந்நிதி. தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பாள் நல்லமங்கை எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். ஜமதக்னி முனிவரின் பூஜைக்கு உதவியதால் கங்கைக்கு வாய்த்த அம்மன் என்று அழைக்கின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.