அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவில் (தென்காசி)
God Name : காசி விஸ்வநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
உலகநாத பாண்டியன் புத்திரபாக்கியம் வேண்டி இவ்விறைவனை வழிபட்டான். உலகம்மையே மகளாகப் பிறந்தாள். குழல்வாய் மொழியம்மை என்ற பெயருடன் வளர்ந்தாள். ஐப்பசி உத்திர நன்நாளில் இறைவனை மணந்தாள்.
பின்னர் குலசேகர பாண்டியன், விந்தன், பராக்கிரம பாண்டியன் ஆகியோர் வழிவழியாக ஆண்டனர்.
பராக்கிரம பாண்டியனும் அவனது மனைவியும் காசிக்கு செல்ல திட்டமிட்டனர். அசந்தர்ப்பத்தால் மதுரையிலேயே சில நாட்கள் தங்க நேரிட்டது. அரசனது கனவில் தோன்றிய இறைவன் தான் மிக அருகாமையில் இருப்பதாகத் தெரிவித்தார். கண் விழித்துப் பார்த்த அரசன், கனவில் தெரிந்தபடி எறும்பு செல்லும் சாரையைப் பின் தொடர்ந்து சென்றான். ஆற்றின் கரையில் நந்தியையும், மடுவில் சிவலிங்கத்தையும் கண்டான். பின்னர் அவற்றை ஸ்தாபித்து கோவில் ஒன்றை நிர்மாணித்தான் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
தென்காசி கண்டான் பராக்கிரம பாண்டியன் என்ற பெயரைக் கொண்டான். சித்ரா நதிக்கரையில் செண்பக வனத்தில் இக்கோவிலை நிர்மாணித்தான்.
மூலவர்: காசி விஸ்வநாதர், அம்பாள்: உலகம்மை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் காசி விஸ்வநாதர். சுயம்பு லிங்க மூர்த்தம். கம்பீரமான தோற்றத்தில் தரிசனம் தருகின்றார். வெகு தொலைவிலிருந்து பார்த்தாலும் சுவாமியை தரிசிக்கும் விதத்தில் சந்நிதியை அமைத்துள்ளனர்.
சிவபெருமான் கோவிலின் தென்புறமாக அம்பாள் உலகம்மை கோவில் கொண்டுள்ளார். சக்தியின் யந்திர ஸ்வரூபமான தாரணி பீடம் - நாற்பது முக்கோணங்களைக் கொண்ட ஸ்ரீ சக்கர பீடம் - காரியசித்தி தரும் யோகபீடம் என்பார்கள்.
சுவாமி சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் இடையே பாலமுருகன் சந்நிதி இருப்பதால் சோமாஸ்கந்த அமைப்பு எனலாம்.
கோபுரத்திற்கும் கோவிலுக்கும் இடையே அகன்ற வெளிப்பரப்பு காணப்படுகிறது. பொதிகை மலையின் காற்று இந்த வெளிப்பரப்பில் சுழன்று வீசி பக்தர்களை வரவேற்கின்றது.
இந்த வெளிப்பரப்பைத் தாண்டியதும் நாம் காண்பது திரு ஓலக்க மண்டபம். அற்புதமான சிற்பங்களை கொண்டுள்ளன. எட்டுத் தூண்களும் எட்டு பொக்கிஷங்கள் எனலாம். கரும்புவில் பூங்கணையுடன் மன்மதனும், அன்ன பட்சியில் ரதி தேவியும், கண்ணாடி பார்த்து திலகமிடும் அழகி, நடராஜரின் தாண்டவமும், வெட்கித் தலை குனியும் காளி தேவியும், ரௌத்திரத்தின் உச்சியில் அகோர வீரபத்ரரும் ஆகிய சிற்பங்கள் சிறந்த வேலைப்பாடுகளை உடையவை.
முகப்பு மண்டபம், மகாமண்டபம், மணிமண்டபம், அர்த்த மண்டபம் ஆகிய அனைத்து மண்டபங்களிலும் அழகிய சிற்பங்களை செதுக்கியுள்ளனர்.
சஹஸ்ரலிங்கம், மீனாட்சி உடனாய சொக்கர், ஜ்வரஹரேஸ்வரர், பைரவர் ஆகிய மூர்த்தங்களை தரிசித்த பிறகு பிரகார வலச்சுற்றில் உள்ள பரிவார தேவதைகளை தரிசனம் செய்யலாம்.
அனுக்ஞை பிள்ளையாரும் உற்சவ மூர்த்தங்களும் அழகானவை.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.