அருள்மிகு ஸ்ரீ ராமஸ்வாமி திருக்கோவில் (கடையம்)

God Name : ஸ்ரீ ராமஸ்வாமி

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

லக்ஷ்மணன், ஹனுமன் உட்பட ராமரது படையை நாக பாசத்தால் கட்டிப் போட்டான் இந்திரஜித். இந்த நாகபாசம் தானே விட்டால்தான் நீங்கும். கருடாழ்வார் தனது வலிமையால் நாகபாசத்தை முறியடித்து அனைவரையும் விடுவித்தார். இதனால் இங்கு கருடனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கருடன் வழிபடும் இந்த ராமஸ்வாமி கோவில் நாகதோஷம் நீக்கும் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவில் அமைந்துள்ள சந்நிதி தெருவின் முதல் வீடே மகாகவி பாரதியார் வாழ்ந்த வீடு. அவரது மனைவி செல்லம்மாள் பிறந்த இல்லம் இது. "காணி நிலம் வேண்டும்" என்ற பாடலில் இடம் பெற்ற காணி நிலம் இந்த வீட்டை அடுத்து உள்ளது. பாரதியார் அடிக்கடி ராமனை தரிசிப்பார். ஸ்ரீ ராம நவமி பஜனைகளில் கலந்து கொண்டு பாடுவார். "சாகாவரம் வேண்டும்" என்ற பாடல் குறிப்பிடத்தக்கது.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ ராமர், லக்ஷ்மணர், சீதா தேவி, ஹனுமன் ஆகியோர் எழுந்தருளி சேவை சாதிக்கின்றனர். அர்த்த மண்டபம் வரை சென்று நின்று பார்த்தால்தான் ஹனுமன் தெரிவார். பெரிய திருவடியாகிய கருடாழ்வாருக்கு முக்கியத்துவம் உள்ள கோவில் இது. அஞ்சலி ஹஸ்தனாக நின்ற திருக்கோலத்தில் தனி சந்நிதி கொண்டு எழுந்தருளியுள்ளார். அழகு வாய்ந்த சிற்பம். ராமநதி அணைக்குச் செல்லும் பாதையில் கைலாசநாதரும் பஞ்ச கல்யாணியும் எழுந்தருளி அருள் புரிகின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.