அருள்மிகு ஸ்ரீ வன்னியப்பர் திருக்கோவில் (ஆழ்வார்குறிச்சி - வன்னியூர்)

God Name : ஸ்ரீ வன்னியப்பர்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

சப்த ரிஷிகளின் கோபத்திற்காளான அக்னி பகவான், அவர்களின் சாபம் கொண்டு, தனது ஒளியை இழந்ததனால் சாப விமோசனம் வேண்டி பூலோகம் வந்து, இவ்வாலயத்து வன்னிமரத்தடியில் சுயம்புவாக எழுந்தருளியிருந்த வன்னியப்பரை வழிபட்டு வந்தார். இவ்வாலயத்து தீர்த்தக்குளத்தில் தினமும் ஸ்நானம் செய்து வன்னியப்பரை பூஜித்து வந்தார். இதனால் இழந்த ஒளியை மீண்டும் பெற்று பிரகாசமானார் என ஸ்தல வரலாறு. ஒரு சமயம் தேவர்களுக்கு அஞ்சிய அக்னி பகவான் இங்குள்ள தீர்த்தத்தில் ஒளிந்து கொண்டாராம். தேவர்களும் இவர் ஒளிந்திருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தனர். யாகங்களில் அளிக்கப்படும் அவிர்பாகத்தை உரியவர்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் பணியை இவரிடம் ஒப்படைத்தனர். பின்னர் தேவர்களுள் ஒருவரானார் என ஸ்தல புராணம் மேலும் விவரிக்கின்றது.
மூலவர்: ஸ்ரீ வன்னியப்பர், அம்பாள்: சிவகாமியம்மை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ வன்னியப்பர். வன்னீசுரமுடையார், அக்னீஸ்வரர் ஆகிய பெயர்களும் உண்டு. சிவகாமியம்மை உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். கல்யாணம்பாள் மற்றும் கர்ப்ப ரட்சாம்பிகை தேவிகளை தரிசிக்கலாம். கால சர்ப்ப தோஷ பரிகார யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. உட்பிரகாரத்தில் விநாயகப் பெருமான், முருகப் பெருமான், சப்த கன்னியர்கள், தட்சிணாமூர்த்தி, பூரணா - புஷ்களா சமேத நம்பி சாஸ்தா, சங்கரநாராயணர், கால பைரவர், சனீஸ்வரர், நாகர்கள் மற்றும் அன்னபூரணியை தரிசிக்கலாம். ஐந்தரை அடி உயர திருமேனியுடன் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட நடராஜர் சிலை அழகாக இருக்கிறது. உற்சவ மூர்த்தங்கள் யாவும் பேரெழிலுடன் காணப்படுகின்றன. மண்டபத்து தூண்களில் காணப்படும் சிற்பங்கள் அனைத்தும் சிறந்த வேலைப்பாடுகளுடையவை. வாலில் மணியுடன் ஆஞ்சநேயர், கிருஷ்ணர், தலையை சாய்த்தபடி கர்ப்பிணிப் பெண் ஆகிய சிற்பங்கள் கண்களை கவரும் வகையில் உள்ளன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.